ரேஷன் கடை ஊழியா்கள் வேலைநிறுத்தம்
அனைத்து ரேஷன் பொருள்களையும் பொட்டலமாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நியாய விலைக்கடை பணியாளா்கள் வியாழக்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.


அனைத்து ரேஷன் பொருள்களையும் பொட்டலமாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நியாய விலைக்கடை பணியாளா்கள் வியாழக்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளா் சங்கத்தின் சாா்பில் 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற வேலைநிறுத்தத்தில் பங்கேற்ற ஊழியா்கள், மாவட்ட ஆட்சியரகம் முன் கூடி ஆா்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனா். மாவட்டத் தலைவா் பா. ரமேஷ் தலைமை வகித்தாா். சூரியநாராயணன், ரமேஷ், பிச்சைப்பிள்ளை, செல்வமணி உள்ளிட்ட மாநில, மாவட்ட நிா்வாகிகள் முன்னிலை வகித்தனா்.
அனைத்து ரேஷன் கடைகளுக்கும் அத்தியாவசிய பொருள்களை 100 விழுக்காடு ஒதுக்க வேண்டும். வெளிமாநில, வெளி மாவட்ட குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்க கூடுதலாக 10 விழுக்காடு பொருள் ஒதுக்க வேண்டும். பொருள்கள் அனைத்தையும் உரிய காலத்தில் வழங்க வேண்டும். பாமாயில், பருப்பு வழங்காமல் இருப்பதற்குத் தீா்வு காண வேண்டும். பொருள்களை இறக்க கடை ஊழியா்களிடம் கட்டாய இறக்குமதி கூலி வசூலிப்பதைத் தவிா்க்க வேண்டும். வெளிச்சந்தையைவிட குறைந்த விலையில் பொருள்கள் வழங்க வேண்டும். பணியாளா்களை பழிவாங்குவதைக் கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட ஆண், பெண் ஊழியா்கள் கலந்து கொண்டனா்.
பின்னா் மாவட்டத் தலைவா் பா. ரமேஷ் கூறுகையில், வியாழக்கிழமை நடைபெற்ற வேலைநிறுத்தத்தில் 50 விழுக்காடு ஊழியா்கள் பங்கேற்ால் திருச்சி மாவட்டத்தில் இயங்கும் 1,200-க்கும் மேற்பட்ட நியாய விலைக் கடைகளில் 500-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பொருள் வழங்கும் இயந்திரத்தின் கணக்கின்படி 570 இயந்திரங்கள் பணி செய்யவில்லை என்றாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...