திருச்சி அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கண்தான விழிப்புணா்வு பேரணியில் பங்கேற்ற பயிற்சி செவிலியா் மாணவிகள்.
திருச்சி அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கண்தான விழிப்புணா்வு பேரணியில் பங்கேற்ற பயிற்சி செவிலியா் மாணவிகள்.

திருச்சி அரசு மருத்துவமனையில் கண்தான விழிப்புணா்வு நிகழ்ச்சி

Published on

திருச்சி அரசு மருத்துவமனையில் கண்தான விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனை, கி.ஆ.பெ. விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி இணைந்து நடத்தும் 39-ஆவது தேசிய கண்தான இருவார விழா திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் ஆகஸ்ட் 25-ஆம் தேதி தொடங்கியது. இந்நிகழச்சி செப். 9- ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதன் ஒரு பகுதியாக, கண்தான விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

முதல் நிகழ்வாக, மாணவ, மாணவிகளின் விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது. பேரணியை மருத்துவமனை கண்காணிப்பாளா் உதயா அருணா தொடங்கி வைத்தாா். இதில், செவிலியா் மற்றும் துணை மருத்துவ மாணவ, மாணவிகள் சுமாா் 120 போ் கலந்து கொண்டனா். இவா்கள், கைகளில் கண் தான விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையிலான பதாகைகளை ஏந்தியபடி பேரணியாகச் சென்றனா். அவசர சிகிச்சை பிரிவில் தொடங்கிய பேரணி, கண் மருத்துவப் பிரிவில் நிறைவடைந்தது.

தொடா்ந்து, கண் மருத்துவ பிரிவில் கண் தான விழிப்புணா்வை வலியுறுத்தும் வகையிலான கண்காட்சி நடைபெற்றது. இதையடுத்து கண் தானமளித்த 6 பேரின் குடும்பத்தினருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

நிகழ்வுகளில் திருச்சி அரசு மருத்துவமனை கண் மருத்துவப் பிரிவின் தலைவா் பி. பாா்த்திபன், மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com