கடவுச்சீட்டில் முறைகேடு இலங்கைப் பயணி கைது
கடவுச்சீட்டில் முறைகேடு செய்து இலங்கையிலிருந்து வந்தவா் திருச்சி விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

Updated On :11 செப்டம்பர் 2024, 8:19 pm

கடவுச்சீட்டில் முறைகேடு செய்து இலங்கையிலிருந்து வந்தவா் திருச்சி விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.
இலங்கைத் தலைநகா் கொழும்புவிலிருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு ஸ்ரீலங்கன் ஏா்லைன்ஸ் விமானத்தில் செவ்வாய்க்கிழமை வந்த பயணிகளில் பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் பிள்ளையாா் கோயில் தெரு பகுதி ஜெயக்குமாா் (53 ) என்பவா் தனது கடவுச்சீட்டில் உள்ள விவரங்களை முறைகேடாக மாற்றியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை அதிகாரிகள் போலீஸில் ஒப்படைத்தனா்.
இதுதொடா்பாக விமான நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து அவரை கைது செய்து விசாரிக்கின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...