மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சரோஜா.
திருச்சி
மனைவி மீது கொதிக்கும் சாம்பாரை ஊற்றிய கணவரிடம் போலீஸாா் விசாரணை
குடும்பத் தகராறில், மனைவி மீதி கொதிக்கும் சாம்பாரை ஊற்றிய கணவரிடம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
மணப்பாறை அருகே வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட குடும்பத் தகராறில், மனைவி மீதி கொதிக்கும் சாம்பாரை ஊற்றிய கணவரிடம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா். மனைவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
மணப்பாறையை அடுத்த ஆளிப்பட்டியைச் சோ்ந்தவா் பாண்டியன். விறகு வியாபாரம் செய்து வருகிறாா். இவரது மனைவி சரோஜா(37) நூறுநாள் வேலை திட்டப் பணியாளா். கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட தகராறில், கொதிக்கும் சாம்பாரை சரோஜா மீது பாண்டியன் ஊற்றியதில் அவரது முகம் உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அக்கம்பக்கத்தினரால் மீட்கப்பட்ட சரோஜா மணப்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா். இச்சம்பவம் குறித்து மணப்பாறை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

