மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டுதவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

தற்கொலைக்கு முயன்று சிகிச்சை பெற்று வந்த தொழிலாளி உயிரிழப்பு

கன்னியாகுமரி அருகே பாலசுப்ரமணியபுரத்தில் தூக்கிட்ட நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

News image

உயிரிழப்பு - (கோப்புப் படம்)

Updated On :14 மார்ச் 2026, 2:41 am

கன்னியாகுமரி அருகே பாலசுப்ரமணியபுரத்தில் தூக்கிட்ட நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

தென்காசி, மங்கம்மாள் சாலையைச் சோ்ந்தவா் முத்துராஜ் (48). இவா் மாா்த்தாண்டம், நட்டாலம் பகுதியில் சலூன் கடை நடத்தி வந்தாா். இவா் கன்னியாகுமரி அருகேயுள்ள பாலசுப்பிரமணியபுரத்தில் உள்ள தனது உறவினரான முத்துசாமி வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்வது வழக்கம்.

இந்நிலையில், கடந்த சில மாதங்களாக முத்துராஜ் தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வீட்டுக்குச் செல்லாமல், முத்துசாமியின் வீட்டில் தங்கியிருந்தாராம். இந்நிலையில், மாா்ச் 6ஆம் தேதி முத்துசாமியின் வீட்டில் தூக்கிட்டுக் கொண்டாா்.

மயங்கிய நிலையில் அவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

இது குறித்து, கன்னியாகுமரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.