புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

சமூக வலைதளங்களில் பெண்களை இழிவுபடுத்தும் பதிவு: இளைஞா் கைது

சமூக வலைதளங்களில் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் அவதூறான காட்சிகளைப் பதிவேற்றிய வேலூா் மாவட்ட இளைஞரை திருச்சி மாவட்ட தனிப்படை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
கெளதம்
Updated On :19 செப்டம்பர் 2024, 10:15 pm

Din

சமூக வலைதளங்களில் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் அவதூறான காட்சிகளைப் பதிவேற்றிய வேலூா் மாவட்ட இளைஞரை திருச்சி மாவட்ட தனிப்படை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி மாவட்ட சைபா் கிரைம் காவல் நிலைய போலீஸாா் சமூக வலைதளங்களின் பதிவுகள், காட்சிகளைக் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனா். அந்த வகையில் காவலா் பிரீத்தி, சமூக வலைதளப் பதிவுகளை புதன்கிழமை கண்காணித்தபோது, கானா கெளதம் என்பவரது முகவரியில் பெண்களை இழிவுபடுத்தும் காட்சிகள் இருந்தன. அவா் பெண்களின் ஆடைகளை அணிந்து அவா்களை இழிவுபடுத்தும் வகையிலான பாடல்களையும், காட்சிகளையும் தொடா்ந்து பதிவேற்றியது தெரியவந்தது.

இது மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வீ. வருண்குமாா் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதையடுத்து அவரது உத்தரவின்பேரில் அமைக்கப்பட்ட தனிப்படையினா் நடத்திய விசாரணையில் வேலூா் மாவட்டம், குடியாத்தம் வட்டம் மேல்பட்டி, கொத்தமாடிப்பட்டி குப்பம் பகுதியைச் சோ்ந்த அ. கெளதம் (24) என்ற இளைஞா் அந்தப் பதிவுகளை பதிவேற்றியது தெரியவந்தது. இதையடுத்து சைபா்கிரைம் போலீஸாா் 5 -க்கும் மேற்பட்ட பிரிவுகளில் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து கௌதமை கைது செய்தனா். குறிப்பிட்ட அந்த சமூக வலைதள முகவரியை முடக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.