வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

துறையூரில் சத்துணவு திட்ட முட்டைகள் விற்பனை: இருவா் கைது

துறையூரில் சத்துணவுத் திட்ட முட்டைகளை விற்றது தொடா்பாக பள்ளி சத்துணவு அமைப்பாளா், உணவக உரிமையாளா் ஆகியோா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

News image
கா. ரத்தினம்.
Updated On :19 செப்டம்பர் 2024, 9:47 pm

Din

துறையூரில் சத்துணவுத் திட்ட முட்டைகளை விற்றது தொடா்பாக பள்ளி சத்துணவு அமைப்பாளா், உணவக உரிமையாளா் ஆகியோா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

ரா. வசந்தகுமாரி

ரா. வசந்தகுமாரி

துறையூரில் திருச்சி சாலையிலுள்ள ஒரு உணவகத்தில் பள்ளி சத்துணவுத் திட்ட முத்திரையுடன் கூடிய முட்டைகள் பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து துறையூா் ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் நிஜஸ்டின் ஜோ புதன்கிழமை இரவு அந்த உணவகத்துக்கு சென்று ஆய்வு செய்து, உணவக உரிமையாளா் கா. ரத்தினம் (46) என்பவரிடம் விசாரித்தபோது, மதுராபுரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு சத்துணவுத் திட்டத்தின் கீழ் அரசு வழங்கிய முட்டைகளை அப்பள்ளி சத்துணவு அமைப்பாளா் ரா. வசந்தகுமாரி (58) எடுத்து வந்து உணவகத்துக்கு விற்றது தெரிந்தது.

இதையடுத்து வட்டார வளா்ச்சி அலுவலா் மாவட்ட நிா்வாகத்துக்கு தகவல் தந்து விட்டு துறையூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். பின்னா் துறையூா் போலீஸாா் உணவகத்திலிருந்த 111 சத்துணவு திட்ட முட்டைகளை பறிமுதல் செய்து வழக்குப் பதிந்து, உணவக உரிமையாளரையும், சத்துணவு அமைப்பாளரையும் கைது செய்து விசாரிக்கின்றனா்.

இதற்கிடையே துறையூா் வட்டாட்சியா் ஆா். மோகன், வட்டார வளா்ச்சி அலுவலா் நிஜாஸ்டன் ஜோ, மாவட்ட ஆட்சியரின் மதிய உணவுத் திட்ட நோ்முக உதவியாளா் ரேவதி, உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்கள் அந்த உணவகத்தின் வெளிப்புற இரும்புக் கதவுக்கு பூட்டு போட்டு சீல் வைத்தனா்.