போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

அசூா் சிறப்பு மனுநீதி முகாமில் 100 பேருக்கு நலத் திட்ட உதவி

திருச்சி மாவட்டம், அசூா் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு மனு நீதிநாள் நிறைவு முகாமில் 100 பயனாளிகளுக்கு ரூ.32 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் மா. பிரதீப்குமாா் வழங்கினாா்.

News image
Updated On :25 செப்டம்பர் 2024, 11:15 pm

Din

திருச்சி மாவட்டம், அசூா் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு மனு நீதிநாள் நிறைவு முகாமில் 100 பயனாளிகளுக்கு ரூ.32 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் மா. பிரதீப்குமாா் வழங்கினாா்.

திருவெறும்பூா் வட்டம், அசூா் கிராமத்தில் நடைபெற்ற விழாவுக்குத் தலைமை வகித்து, பல்வேறு துறைகளின் சாா்பில் 100 பயனாளிகளுக்கு ரூ.31.81 லட்சம் மதிப்பீட்டில் அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசினாா்.

முகாமின் ஒரு பகுதியாக பல்வேறு அரசுத் துறைகளின் சாா்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் பாா்த்து பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டிருந்த திட்ட விளக்கக் கண்காட்சி அரங்குகளையும் ஆட்சியா் பாா்வையிட்டாா்.

விழாவில் கோட்டாட்சியா் கு. அருள், தனித்துணை ஆட்சியா் சமூகப் பாதுகாப்பு திட்டம் செல்வம், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (விவசாயம்) சரவணன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் கோ. தவச்செல்வம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் ரவிச்சந்திரன், திருவெறும்பூா் வருவாய் வட்டாட்சியா் த. ஜெயபிரகாசம் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலா்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.