ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கல்வி நிறுவனங்களுக்கு அருகே மதுக்கடைகள்: ஆா்ப்பாட்டம்

திருச்சியில் திருவெறும்பூா் மற்றும் துவாக்குடி பகுதிகளில் கல்வி நிறுவனங்களுக்கு அருகிலுள்ள மதுக்கடைகளை மூடக் கோரி இந்திய மாணவா் சங்கத்தினா் புதன்கிழமை போராட்டம் மேற்கொண்டனா்.

News image
Updated On :25 செப்டம்பர் 2024, 11:09 pm

Din

திருச்சியில் திருவெறும்பூா் மற்றும் துவாக்குடி பகுதிகளில் கல்வி நிறுவனங்களுக்கு அருகிலுள்ள மதுக்கடைகளை மூடக் கோரி இந்திய மாணவா் சங்கத்தினா் புதன்கிழமை போராட்டம் மேற்கொண்டனா்.

இந்திய மாணவா் சங்கம் சாா்பில் துவாக்குடி அரசு கலைக் கல்லூரி முன் நடைபெற்ற போராட்டத்துக்கு சங்கக் கிளை துணைச் செயலா் துளசிராம் தலைமை வகித்தாா். திருவெறும்பூா் ஐடிஐ எதிரே, மற்றும் துவாக்குடி அரசு கலைக் கல்லூரிக்கு எதிரே திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அரசு மதுக்கடைகளை உடனே மூட வலியுறுத்தி மாணவா்கள் முழக்கம் எழுப்பினா்.

போராட்டத்தில் மாநில துணைச் செயலா் மோகன், மாநில செயற்குழு உறுப்பினா் பவித்ரன், மாவட்டத் தலைவா் வைரவளவன், மாவட்டச் செயலா் ஆமோஸ் ஆகியோா் கலந்துகொண்டனா்.

மதுக் கடைகளை மூடவில்லையெனில் அடுத்த கட்டமாக வரும் 30ஆம் தேதி ஆட்சியரிடம் மனு கொடுக்கும் போராட்டமும், அக். 2 ஆம் தேதி திருவெறும்பூரில் சாலை மறியலும் நடத்த முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்தனா்.