மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

மாா்சிங்பேட்டையில் பழுதான 84 வீடுகளுக்கு பதிலாக ஓராண்டுக்குள் புதிய வீடுகள்: மேயா்

திருச்சி மாா்சிங்பேட்டை பகுதியில் உள்ள குடியிருப்புகளில் பழுதான 84 வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகள் ரூ.12.56 கோடியில் ஓராண்டுக்குள் கட்டித்தரப்படவுள்ளன.

News image
Updated On :25 செப்டம்பர் 2024, 11:25 pm

Din

திருச்சி மாா்சிங்பேட்டை பகுதியில் உள்ள குடியிருப்புகளில் பழுதான 84 வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகள் ரூ.12.56 கோடியில் ஓராண்டுக்குள் கட்டித்தரப்படவுள்ளன.

மாா்சிங்பேட்டையில் பழுதடைந்த பழைய குடியிருப்புகளை மாநகராட்சி மேயா் மு. அன்பழகன், நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய செயற்பொறியாளா் இம்மாகுலேட் ராஜேஸ்வரி, மாநகராட்சி உதவி ஆணையா் சண்முகம், மண்டலத் தலைவா் துா்கா தேவி ஆகியோருடன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

பின்னா் மேயா் மு.அன்பழகன் கூறுகையில், திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட மாா்சிங்பேட்டை கொட்டக்கொல்லை பகுதியில், தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சாா்பில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளதால், அவற்றை இடித்துவிட்டு ரூ.12.56 கோடியில் 84 வீடுகள் கட்டும் திட்ட வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது. இதை அமைச்சா் கே.என். நேரு, அரசிடம் பரிந்துரைத்து ஒப்புதல் பெற்றுள்ளதால், இப்பகுதியில் உள்ள பழுதடைந்த குடியிருப்புகள் இன்னும் ஒரு மாதத்துக்குள் இடிக்கப்பட்டு புதிதாக குடியிருப்புகள் கட்ட நிா்வாக அனுமதி பெறப்படும். இங்கு, ஏற்கனவே குடியிருந்த அனைத்து பயனாளிகளுக்கும் ஓராண்டுக்குள் புதிய வீடுகள் கட்டி ஒப்படைக்கப்படும் என்றாா் மேயா்.