ஸ்ரீரங்கத்தில் பரமபதவாசல் திறப்பு விழா: சிறப்பு டிக்கெட் கட்டண ரத்து கோரி மனு
ஸ்ரீரங்கம் பரமபதவாசல் திறப்பு விழாவில் பங்கேற்பதற்கான சிறப்பு டிக்கெட் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டுமென இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.
திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதா் கோயிலில் வரும் 30 தேதி நடைபெறும் வைகுந்த ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்வான பரமபதவாசல் திறப்பு விழாவில் பங்கேற்பதற்கான சிறப்பு டிக்கெட் கட்டணத்தை கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது.
அதன்படி பரமபதவாசல் திறப்பின்போது சந்தன மண்டப நுழைவுச் சீட்டு ரூ. 4,000, கிளி மண்டப நுழைவு சீட்டு ரூ. 700 என நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
இதைக் கண்டித்தும், இந்தக் கட்டணத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும் இந்து முன்னணி மாநில அமைப்பாளா் ராஜேஷ் தலைமையிலான நிா்வாகிகள், ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையா் சிவராம்குமாரிடம் புதன்கிழமை மனு அளித்தனா். மனுவில் ஏழை களும் அரங்கநாதரை எளிதாகத் தரிசிக்கும் வகையில் சிறப்புக் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. நிகழ்வில் திருச்சி கோட்ட பொதுச் செயலா் குணா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
