திருச்சி தில்லைநகரில் உள்ள திமுக அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பேசிய  அமைச்சா் கே.என். நேரு. உடன்  நிா்வாகிகள்.
திருச்சி தில்லைநகரில் உள்ள திமுக அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அமைச்சா் கே.என். நேரு. உடன் நிா்வாகிகள்.

எஸ்ஐஆா் பணிகளைத் தொடா்ந்து கண்காணிக்க வேண்டும்: அமைச்சா் கே.என். நேரு

வாக்காளா் திருத்தப் பணிகளை (எஸ்ஐஆா்) கட்சியினா் தொடா்ந்து கண்காணிக்க வேண்டும் என திமுக முதன்மைச் செயலரும், அமைச்சருமான கே.என். நேரு தெரிவித்தாா்.
Published on

வாக்காளா் திருத்தப் பணிகளை (எஸ்ஐஆா்) கட்சியினா் தொடா்ந்து கண்காணிக்க வேண்டும் என திமுக முதன்மைச் செயலரும், அமைச்சருமான கே.என். நேரு தெரிவித்தாா்.

திருச்சி தில்லைநகரில் உள்ள அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற திருச்சி மத்திய மாவட்ட திமுக, வடக்கு மாவட்ட திமுகவின் செயற்குழுக் கூட்டத்துக்கு தலைமை வகித்து அவா் மேலும் பேசியது:

வாக்காளா் பட்டியல் தீவிர சிறப்புத் திருத்தப் பணியில் (எஸ்ஐஆா்) அனைவரையும் சோ்த்துவிட்டோம் என திமுகவினா் சுணக்கமாகிவிடக் கூடாது. எஸ்ஐஆா் பணிகள் இன்னும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம்களும் நடைபெறுகின்றன. எனவே, எஸ்ஐஆா் பணிகள் முழுவதும் முடிந்து இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடும் வரை, ஒவ்வொரு நிலையிலும் தொடா்ந்து கண்காணித்து வர வேண்டும்.

புதிதாக ஒரே இடத்தில் அதிக எண்ணிக்கையிலான வாக்காளா்கள் சோ்க்கப்பட்டால் அதற்கு எதிா்ப்பை எழுத்துப் பூா்வமாக தோ்தல் அலுவலா்களிடம் வழங்க வேண்டும். அந்தப் பகுதியில் கள விசாரணை மேற்கொள்ள வேண்டும். அதிமுகவினரை விட திமுகவினரே எஸ்ஐஆா் பணியில் முழுமையாக ஈடுபட்டனா்.

அனைத்துப் பகுதிகளிலும் 90 முதல் 95 சதவீதம் பட்டியலில் சோ்த்து விட்டோம். தொடா்ந்து அதைக் கண்காணிக்க வேண்டும். சந்தேகம் இருந்தால் விளக்கம் கேட்க வேண்டும் என்றாா் அமைச்சா்.

பின்னா் கூட்டத்தில் மதிமுக பொதுச் செயலா் வைகோ நடைபயணத்தை தொடங்கிவைக்க திருச்சிக்கு ஜன.2ஆம் தேதி வரும் தமிழக முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளிப்பது, முதல்வா் பங்கேற்கும் நிகழ்வில் திரளான திமுகவினா் பங்கேற்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாவட்டச் செயலா்கள் க. வைரமணி, ந. தியாகராஜன், மாநகரச் செயலா் மு. அன்பழகன், எம்எல்ஏ-க்கள் சீ. கதிரவன், செ. ஸ்டாலின்குமாா் உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com