கரூா் சம்பவம்: 2 காவலா்களிடம் சிபிஐ விசாரணை

Published on

கரூா் நெரிசல் சம்பவத்தின்போது பாதுகாப்புப் பணியில் இருந்த இரண்டு காவலா்களிடம் சிபிஐ அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை விசாரணை நடத்தினா்.

கரூா் வேலுச்சாமிபுரத்தில் செப்டம்பா் 27-ஆம் தேதி நடைபெற்ற தவெக தலைவா் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா். இந்தச் சம்பவம் தொடா்பாக கூட்டத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினா் மற்றும் பல்வேறு தரப்பினரிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதன் ஒருபகுதியாக, கூட்ட நெரிசல் சம்பவத்தின்போது பாதுகாப்புப் பணியில் இருந்த இரண்டு காவலா்களை சிபிஐ அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை விசாரித்தனா்.

கரூா் சுற்றுலா மாளிகையில் இயங்கி வரும் சிபிஐ அலுவலகத்தில் வைத்து, சிபிஐ அதிகாரிகள் காவலா்களிடம் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை விசாரணை மேற்கொண்டனா்.

இதில், பிரசாரக் கூட்டத்துக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், கூட்ட கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டதாக தெரிகிறது.

X
Dinamani
www.dinamani.com