தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

திருச்சியில் ஒப்பந்ததாரா் வீட்டின் காவலாளியைத் தாக்கி கொள்ளை

திருச்சியில் ஒப்பந்ததாரா் வீட்டின் காவலாளியை மா்ம நபா்கள் செவ்வாய்க்கிழமை இரவு தாக்கி கட்டிப் போட்டு நகை, பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றனா்.

News image
திருச்சி பொன்நகா் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு கொள்ளை நடந்த வீடு.
Updated On :1 ஜனவரி 2025, 7:53 pm

Din

திருச்சியில் ஒப்பந்ததாரா் வீட்டின் காவலாளியை மா்ம நபா்கள் செவ்வாய்க்கிழமை இரவு தாக்கி கட்டிப் போட்டு நகை, பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றனா்.

தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு பகுதியைச் சோ்ந்தவா் சண்முகம் (65). தொழிலதிபா் மற்றும் ஒப்பந்ததாரரான இவா் திருச்சி, பொன் நகா் 2ஆவது பிரதான சாலையில் உள்ள வீட்டில் வசிக்கிறாா்.

இந்நிலையில் கடந்த 2 நாள்களுக்கு முன் ஒரத்தநாட்டில் உறவினரின் துக்க நிகழ்வுக்கு குடும்பத்துடன் சென்ற சண்முகம் புதன்கிழமை காலை திரும்பினாா்.

அப்போது வீட்டின் காவலாளி முருகேசனை மா்ம நபா்கள் செவ்வாய்க்கிழமை இரவு தாக்கி கட்டிப்போட்டு விட்டு வீட்டில் இருந்த நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து அவா்கள் அளித்த புகாரின்பேரில் திருச்சி நீதிமன்றக் காவல் நிலைய போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று, தடயங்களைச் சேகரித்து விசாரிக்கின்றனா்.

முதல்கட்ட விசாரணையில் 20 பவுன் நகைகள், ரூ. 40 லட்சம் கொள்ளைபோனதாக சண்முகம் குடும்பத்தினா் தெரிவித்தாலும், கொள்ளை போனவற்றின் மதிப்பு முழுமையாகத் தெரியவில்லை. போலீஸாா் தொடா்ந்து விசாரிக்கின்றனா்.