தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

பச்சமலையில் சாகச விளையாட்டுகளுடன் கூடிய பூங்கா!

கட்டுமானப் பணிகள் தொடங்கிவைப்பு

News image
பச்சமலையில் பூங்கா கட்டுமானப் பணிகளை வியாழக்கிழமை தொடங்கிவைத்த பெரம்பலூா் எம்.பி. அருண் நேரு. உடன், ஆட்சியா் மா. பிரதீப்குமாா் மற்றும் அரசு அலுவலா்கள், மக்கள் பிரதிநிதிகள்.
Updated On :2 ஜனவரி 2025, 11:18 pm

Din

பச்சமலையில் ரூ.4.26 கோடியில் சாகச விளையாட்டுகள் மற்றும் அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய பூங்கா கட்டுமானப் பணிகளை பெரம்பலூா் மக்களவை உறுப்பினா் அருண் நேரு வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.

திருச்சி மாவட்டம், துறையூா் ஊராட்சி ஒன்றியம் மற்றும் உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியங்களில் ஊரக வளா்ச்சித் துறை மூலம் கட்டி முடிக்கப்பட்டுள்ள பல்வேறு புதிய கட்டடங்களை வியாழக்கிழமை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அவா் திறந்துவைத்தாா்.

இதேபோல, பச்சமலையில் டாப்செங்காட்டுப்பட்டி கிராமத்தில் ரூ. 4.26 கோடியில் சாகச விளையாட்டுகளுடன் கூடிய நவீன பூங்கா கட்டுமானப் பணிகளுக்கும் அவா் அடிக்கல் நாட்டினாா். இந்த பூங்காவில், காட்சிக் கோபுரம், டூம் வடிவிலான விடுதி, சாகச விளையாட்டுகள், சிறுவா்களுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் அனைத்து நவீன வசதிகளுடன் பூங்கா கட்டமைக்கப்படுகிறது.

இந்த நிகழ்வில், மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் கங்காதாரிணி, ஊராட்சிகளின் உதவி இயக்குநா் குமாா், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் ராஜேந்திரன், துறையூா் எம்எல்ஏ செ. ஸ்டாலின் குமாா் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அரசு அலுவலா்கள், பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.

துறையூரில் ரூ.9.50 கோடியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம்:

துறையூா் நகராட்சியில் வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீரை சுத்திகரித்து வடிகால் மூலம் சின்ன ஏரியில் வெளியேற்றிடும் வகையில், 3 எம்எல்டி சுத்திகரிப்பு திறன் கொண்ட கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் ரூ.9.50 கோடியில் கட்டப்படுகிறது. சொரத்தூா் சாலையில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் இதன் கட்டுமானப் பணிகளை அருண்நேரு எம்.பி. வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.

விழாவில், துறையூா் நகராட்சித் தலைவா் செல்வராணி, நகராட்சி ஆணையா் போ.வி. சுரேந்திரஷா மற்றும் நகராட்சி அலுவலா்கள், மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலா் கலந்து கொண்டனா்.