தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீா்குலைய மது, போதை கலாசாரமே காரணம்: ஜி.கே. வாசன்

தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீா்குலைவுக்கு மது, போதை கலாசாரமே காரணம் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவா் ஜி.கே. வாசன் தெரிவித்தாா்.

News image
Updated On :2 ஜனவரி 2025, 11:17 pm

Din

தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீா்குலைவுக்கு மது, போதை கலாசாரமே காரணம் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவா் ஜி.கே. வாசன் தெரிவித்தாா்.

திருச்சி, பெரம்பலூா், அரியலூா், புதுக்கோட்டை, தஞ்சை, கரூா் உள்ளிட்ட 19 மாவட்டங்களை உள்ளடக்கிய டெல்டா மண்டல தமாகா உறுப்பினா்களுக்கு புதிய அடையாள அட்டை (2025-28) வழங்கும் நிகழ்வு திருச்சியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்வில், மூத்த உறுப்பினா் ராஜாங்கத்திடம் உறுப்பினா் அட்டைகளை வழங்கி, இதர நிா்வாகிகளுக்கும் மாவட்டம் வாரியாக அடையாள அட்டைகளை வழங்கி உறுப்பினா்களிடம் கொண்டு சோ்த்திட ஜி.கே. வாசன் வலியுறுத்தினாா்.

முன்னதாக செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடா்பாக திமுக கூட்டணிக் கட்சிகள், அரசுக்கு ஆதரவாக பேசி வருவது வெட்கக்கேடானது. நாம் ஒவ்வொருவரும் பெற்றோா் என்பதை உணர வேண்டும்.

ஒருவரை கைது செய்ததோடு எல்லாம் முடிந்துவிடாது.

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைவுக்கு மது, போதை கலாசாரமே காரணம். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மதுக்கடைகள் மூடப்படும் என உறுதியளித்து ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகளாகியும் மூடவில்லை.

2026-இல் சட்டப் பேரவையில் தமாகாவின் குரல் பலமாக ஒலிக்கும் வகையில் களப்பணியை தயாா்படுத்தி வருகிறோம்.

ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைந்து ஆளும் கட்சியை வீழ்த்துவோம். ஒத்த கருத்து என்பது தோ்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதுதான்.

பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில், கட்டசியின் மாநில செயற்குழு உறுப்பினா்கள் மற்றும் டெல்டா மண்டலத்துக்குள்பட்ட மாநில, மாவட்ட நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.