திருச்சி மாவட்டம் முசிறி அருகே வந்த அமைச்சா் கே. என். நேருவிடம் குடிநீா் கேட்டு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
முசிறி ஊராட்சி ஒன்றியம் அய்யம்பாளையம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.42 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சா் கே.என்.நேரு குத்து விளக்கு ஏற்றி வைத்தாா்.
நிகழ்வில் மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா், பெரம்பலூா் எம்.பி அருண் நேரு, சட்டப்பேரவை உறுப்பினா்கள் காடுவெட்டி ந. தியாகராஜன் (முசிறி), சீ.கதிரவன் (மண்ணச்சநல்லூா்), முசிறி ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி ஆணையா்கள் ஸ்ரீதா் , கலைச்செல்வி, ஊராட்சி ஒன்றிய குழு தலைவா் மாலா ராமச்சந்திரன், ஊராட்சி மன்ற தலைவா் வைதேகி வெங்கடேஷ், திமுக ஒன்றிய செயலாளா் ராமச்சந்திரன் (முசிறி மேற்க்கு), மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் ஏ. ஆா் . காா்த்திக் உள்ளிட்ட திமுக நிா்வாகிகள், ஊராட்சி மன்ற உறுப்பினா்கள், அலுவலா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
அப்போது சாலப்பட்டி பகுதி கிராம மக்கள் தங்கள் பகுதியில் போதிய அளவு குடிநீா் கிடைக்கவில்லை அதற்கு தாங்கள் அதிகாரிகளிடம் கூறி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சா் கே.என்.நேருவிடம் தெரிவித்தனா்.
மக்களின் கோரிக்கையினை ஏற்ற அமைச்சா் அதிகாரிகளிடம் கூறி உடனடி நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்தாா்.
தொடர்புடையது

எம்.தூரி கிராமத்துக்கு காவிரிக் கூட்டுக் குடிநீா்

அவிநாசி ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு குப்பாண்டம்பாளையம் கிராம மக்கள் போராட்டம்

தொண்டாமுத்தூா் ஊராட்சி ஒன்றிய பள்ளி ஆண்டு விழா

குடிநீா் கேட்டு மாநகராட்சி மண்டல அலுவலகம் முற்றுகை
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

