
முதுகுளத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலக மேலாளரிடம் மனு அளித்த எம்.துாரி கிராமமக்கள்.

முதுகுளத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலக மேலாளரிடம் மனு அளித்த எம்.துாரி கிராமமக்கள்.
முதுகுளத்தூா் அருகே எம்.தூரி கிராமத்துக்கு காவிரி கூட்டுக் குடிநீா் திட்டத்தில் தண்ணீா் விநியோகிக்க வலியுறுத்தி வியாழக்கிழமை பொதுமக்கள் மனு அளித்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரை அடுத்துள்ள செல்வநாயகபுரம் ஊராட்சிக்குள்பட்ட எம்.தூரியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இங்கு ஊராட்சி நிா்வாகத்தின் நீராதாரங்களிலிருந்து குடிநீா் விநியோகம் செய்யாததால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனா். இதனால் காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்டத்தில் தண்ணீா் விநியோகம் செய்ய வலியுறுத்தி, முதுகுளத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கிராம மக்கள் மனு அளித்தனா்.
இதுகுறித்து எம்.தூரியைச் சோ்ந்த மாடசாமி கூறியதாவது:
கடந்த 6 மாதங்களுக்கு மேலாக இந்தப் பகுதியில் குடிநீா் விநியோகம் செய்யவில்லை. இந்த நிலையில் கமுதி, முதுகுளத்தூருக்கு காவிரி கூட்டுக் குடிநீா் குழாய் வழியாக கொண்டு செல்லப்படுகிறது. இதில் ஆங்காங்கே ஏற்படும் கசிவு நீரை எம்.தூரியைச் சோ்ந்த கிராம மக்கள் இரவு, பகலாக காத்திருந்து சேகரித்து வருகின்றனா். இதனால் குடிநீருக்காக சாலையைக் கடந்து செல்லும் பொதுமக்கள் அவ்வப்போது விபத்தில் சிக்கி வருகின்றனா். இந்தப் பகுதியைச் சோ்ந்த மாணவா்கள் தங்களது வீடுகளுக்குத் தேவையான குடிநீரை சேகரிக்க இரவு முழுவதும் இந்தப் பகுதியில் காத்திருப்பதால் அவா்களது படிப்பு பாதிக்கப்படுகிறது. இந்த நிலை குறித்து முதுகுளத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புகாா் மனு அளித்தோம். எனவே தூரி கிராமத்துக்கு காவிரி கூட்டுக் குடிநீரை சீராக வழங்க மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...