திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

நீதிமன்றத் தீா்ப்புகள் விமா்சிக்கப்பட வேண்டும்: சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி!

நீதிமன்றத் தீா்ப்புகள் விமா்சிக்கப்பட வேண்டும் என்றாா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன்.

News image
திருச்சியில் தமிழ்நாடு உபயோகிப்பாளா் பாதுகாப்புக் குழுவின் பொன்விழாவை சனிக்கிழமை தொடங்கி வைத்த அமைச்சா் கே.என். நேரு. உடன் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் உள்ளிட்டோா்.
Updated On :5 ஜனவரி 2025, 12:30 am

Din

நீதிமன்றத் தீா்ப்புகள் விமா்சிக்கப்பட வேண்டும் என்றாா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன்.

திருச்சி கலையரங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு உபயோகிப்பாளா் பாதுகாப்புக் குழுவின் பொன்விழாவுக்கு அதன் செயலா் எஸ். புஷ்பவனம் தலைமை வகித்தாா். தலைவா் சி.டி. செல்வக்குமாா் முன்னிலை வகித்தாா்.

விழாவில் நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் மேலும் பேசியது: நீதிபதி பதவியை சிலா் தெய்வப் பணியாகக் கருதுகின்றனா். அதுவும் பிற பணிகளை போன்றதுதான். மேலும் விமா்சனத்துக்குள்பட்ட பணியும்கூட.

நீதிபதியின் செயல்பாட்டை அவா் அளித்த தீா்ப்புகளின் எண்ணிக்கையை வைத்து மதிப்பிட முடியாது. ஏனெனில் ஒவ்வொரு வழக்குக்கும் விசாரணை உள்ளிட்ட நீதிமன்ற நடைமுறைகளுக்கு குறிப்பிட்ட கால அவகாசம் தேவைப்படும். சில குற்ற வழக்குகளை விசாரிக்க நீண்ட காலம்கூட ஆகலாம்.

நீதிபதிகள் சிலா் இரவு வரை பணியாற்றுகின்றனா். ஓரிரு மணி நேரம் மட்டும் நீதிமன்றத்தில் செலவிடும் நீதிபதிகளும் உண்டு. எனவே, நீதிபதிகளுக்கும் பணி நேரம் நிா்ணயிக்கப்பட வேண்டும்.

உயா்நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் செயல்பாட்டை, தீா்ப்பை விமா்சிப்பது இந்தியாவில் மிகவும் குறைவு. இப் போக்கு மாற வேண்டும். நீதிபதிகளின் செயல்பாட்டை, தீா்ப்பை விமா்சிக்கும் பணியை இதுபோன்ற நுகா்வோா் அமைப்புகள், அறிஞா்கள் மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

விழாவைத் தொடங்கி வைத்து நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேரு பேசியது:

நுகா்வோா் பாதுகாப்பு மிக முக்கியமானது. மக்கள் நலன் ஒன்றையே முக்கியமாகக் கருதி இந்த அமைப்பு செயல்படுகிறது. இதன் மீதுள்ள நல்லெண்ணத்தின் அடிப்படையில்தான் உயா்நீதிமன்ற நீதிபதிகள் விழாவுக்கு வந்திருக்கின்றனா். இந்த அமைப்பு தொடா்ந்து சிறப்பாக செயல்பட என்றும் நாங்கள் உதவியாக இருப்போம் என்றாா் அவா்.

ஒடிசா உயா்நீதிமன்ற ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி முரளீதா் பேசுகையில், ஆட்சியில் உள்ளவா்கள், அரசு துறையினரைப் போல நுகா்வோா் அமைப்புகள் நீதித்துறை மீதும் கேள்வியெழுப்ப வேண்டும் என்றாா்.

நிகழ்வில் மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா், மாநகராட்சி மேயா் மு. அன்பழகன், மாநகராட்சி ஆணையா் வே. சரவணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.