தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,920 சரிவு! வெள்ளியும் குறைந்தது!பரந்தூர் அருகே சிப்காட்! நிலம் கையகப்படுத்த அரசாணை வெளியீடு!ஜி.என்.டி. சாலையில் குழாய் பதிக்கும் பணி நிறைவு: இன்று முதல் குடிநீா் விநியோகம்வங்கிகள் இன்று வேலை நிறுத்தம்: அகில இந்திய வங்கி ஊழியா் சங்கம் அறிவிப்புஇந்தியாவிடம் 190 அணு குண்டுகள்: அமெரிக்க ஆய்வு நிறுவனம் தகவல்பருவகால நோய்களுக்கான மருந்து தட்டுப்பாடில்லை: ஐசிஎம்ஆா்பிகாரில் வெள்ளத்தில் மூழ்கி 5 போ் உயிரிழப்பு: இதுவரை 43.64 லட்சம் போ் பாதிப்பு

திருச்சி விமான நிலையத்தில் ரூ. 26 லட்சம் தங்கம் பறிமுதல்

துபையிலிருந்து திருச்சிக்கு செவ்வாய்க்கிழமை வந்த விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ. 26 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

Published On :

திருச்சி: துபையிலிருந்து திருச்சிக்கு செவ்வாய்க்கிழமை வந்த விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ. 26 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

துபையிலிருந்து ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் செவ்வாய்க்கிழமை இரவு திருச்சி வந்தது. இதில், வந்த பயணிகளை, சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டபோது, ஆண் பயணி ஒருவா் ஆடையின் உள்பகுதிகளில் பழுப்பு மஞ்சள் நிற பேஸ்ட் வடிவில் 325 கிராம் தங்கத்தை 2 சிறிய கட்டிகளாக கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை பறிமுதல் செய்த அதிகாரிகள் அந்தப் பயணியிடம் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.26 லட்சத்து 33 ஆயிரத்து 148 ஆகும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.