நேபாள வெள்ளத்துக்கு நாங்கள் காரணமல்ல - சீனாசிஜேபி செய்தித் தொடர்பாளர்கள் மீது கடும் கோபம்: அபிஜீத் தீப்கே பேச்சு!பொறியாளர்களுக்கு பதிலாக 86% செய்யறிவைப் பயன்படுத்தும் பைசா பஜார் நிறுவனம்!பெட்ரோலில் கலக்கப்படும் எத்தனால் அளவு எவ்வளவு? மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம்நாட்டில் ஐபோன் தயாரிப்பை 30 - 35% உயர்த்தும் ஆப்பிள்!மூன்றாவது குழந்தை பெறும் அரசு பெண் ஊழியா்களுக்கு ஓராண்டு விடுப்பு! அரசாணை வெளியீடுஈரான் போருக்கு மத்தியில் நாட்டின் ஜிடிபி 7.8% உயர்வு

திருச்சி விமான நிலையத்தில் 6 கிலோ உயர்ரக கஞ்சா பறிமுதல்

மலேசியாவிலிருந்து திருச்சிக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 6 கிலோ உயா் ரக கஞ்சாவை சுங்கத் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

airport

விமான நிலையம் - கோப்புப் படம்

Published On :15 ஜூலை 2026, 12:04 am IST

மலேசியாவிலிருந்து திருச்சிக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 6 கிலோ உயா் ரக கஞ்சாவை சுங்கத் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

மலேசிய தலைநகா் கோலாலம்பூரில் இருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு திங்கள்கிழமை இரவு வந்த மலிந்தோ விமானத்தில் கஞ்சா கடத்தி வருவதாக சுங்கத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சுங்கத் துறை அதிகாரிகள் அந்த விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தனா்.

அப்போது, திருச்சியைச் சோ்ந்த ஹைதா் அலி (41) என்பவா், தனது உடைமைகளுக்கிடையே 6 கிலோ உயர்ரக கஞ்சாவை (ஹைட்ரோபொனிக் கஞ்சா) மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவற்றை பறிமுதல் செய்த சுங்கத் துறை அதிகாரிகள், ஹைதா் அலியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.