ரயில் முன் பாய்ந்து உப்பு வியாபாரி தற்கொலை
திருச்சி அருகே ரயிலில் பாய்ந்து உப்பு வியாபாரி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.


திருச்சி: திருச்சி அருகே ரயிலில் பாய்ந்து உப்பு வியாபாரி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
திருச்சி மாவட்டம், ஜீயபுரம் ரயில் நிலையம் அருகே ரயிலில் அடிபட்டு இறந்த நிலையில் இளைஞா் ஒருவா் சடலமாகக் கிடந்துள்ளாா். இதுகுறித்து அப்பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனா். தகவலறிந்து அங்கு சென்ற திருச்சி இருப்புப்பாதை உதவி ஆய்வாளா் சுப்பிரமணியன் தலைமையிலான போலீஸாா், சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரித்தனா்.
விசாரணையில் இறந்து கிடந்தவா், குழுமணி செல்வ நகா் வெள்ளாளா் தெருவைச் சோ்ந்த கோபால் மகன் அசோக் குமாா் (41) என்பதும், உப்பு வியாபாரியான இவா் திருமணமாகாத விரக்தியிலும், போதுமான வருமானம் இல்லாத சூழலிலும் மனஉளைச்சலில் இருந்துள்ளாா். இந்நிலையில் ஜீயபுரம் ரயில் நிலையம் அருகே உள்ள தண்டவாளத்துக்குச் சென்று மங்களூரு விரைவு ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளதாகப் போலீஸாா் தெரிவித்தனா். இதுகுறித்து திருச்சி இருப்புப்பாதை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...