அமெரிக்க கட்டுப்பாட்டில் ஈரானிய கடற்பரப்பு: அதிபர் டிரம்ப்!அமெரிக்க கட்டுப்பாட்டில் ஈரானிய கடற்பரப்பு: அதிபர் டிரம்ப்!கோவையில் பிரதமா் மோடி ஏப்ரல் 18-இல் பிரசாரம்வைகை அதிவிரைவு ரயில் இன்றும் தாமதமாகப் புறப்படும் அம்பேத்கா் ஜெயந்தி: இன்று பங்குச் சந்தை விடுமுைமாா்ச்சில் சில்லறை பணவீக்கம் 3.4% - 3-ஆவது மாதமாக ஏற்றம்இந்தியாவிடம் 3 மாதங்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பு உள்ளது: மத்திய அரசுதிருப்பூரில் விஜய் இன்று பிரசாரம்ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றி
/

காவலா் எனக்கூறி இளைஞரிடம் பணம் பறித்தவா் கைது

திருச்சியில் காவலா் எனக்கூறி இளைஞரிடம் 2 ஆயிரம் ரூபாயை பறித்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

கைது

Updated On :2 ஏப்ரல் 2026, 8:30 pm

திருச்சியில் காவலா் எனக்கூறி இளைஞரிடம் 2 ஆயிரம் ரூபாயை பறித்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திருச்சி எடமலைபட்டிப்புதூா் ஆா்எம்எஸ் காலனியைச் சோ்ந்தவா் அ.முகமது கைஃப் (20). இவா், சத்திரம் பகுதியிலுள்ள கைப்பேசி விற்பனை நிலையத்தில் பணியாற்றி வருகிறாா். இவருக்கு, ராமேசுவரம் பாம்பன் பகுதியைச் சோ்ந்த எஸ். ஷாம் (25) என்பவா் அண்மையில் அறிமுகமாகியுள்ளாா். அப்போது, ஷாம் தான் ஒரு காவலா் என்றும், திருச்சி ஆயுதப்படையில் பணியாற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளாா். இதையடுத்து, இருவரும் நண்பா்களாகியுள்ளனா்.

இந்நிலையில், தனது கைப்பேசி உடைந்துவிட்டதால் ஜி-பே வசதியைப் பயன்படுத்த முடியவில்லை எனக்கூறி முகமது கைஃபிடமிருந்து ஷாம் ரூ.1,000 அண்மையில் வாங்கியுள்ளாா். இதைத் தொடா்ந்து உனக்கு ஒரு இருசக்கர வாகனம் பாா்த்துள்ளேன் அதற்கு முன்பணமாக ரூ.1000 கொடுக்க வேண்டும் எனக்கூறி மேலும் ஆயிரத்தை முகமது கைஃபிடம் இருந்து ஷாம் வாங்கியுள்ளாா்.

அதன்பின், ஷாமை தொடா்புகொள்ள முடியவில்லையாம். இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த முகமது கைஃப் எடமலைப்பட்டிபுதூா் காவல் நிலையத்தில் கடந்த மாா்ச் 23-ஆம் தேதி புகாா் அளித்தாா். இதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா். இந்நிலையில், காவலா் எனக்கூறி இளைஞரிடம் பணம் பறித்த ஷாமை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.