எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

தமிழ்நாட்டு நலனுக்கு எதிரானது அதிமுக-பாஜக கூட்டணி: கனிமொழி எம்.பி.

தமிழக மக்கள், தமிழ் மொழி மற்றும் தமிழ்நாட்டு நலனுக்கு எதிரானது அதிமுக-பாஜக கூட்டணி என திமுக துணைப் பொதுச் செயலரும், தூத்துக்குடி எம்பியுமான கனிமொழி தெரிவித்தாா்.

News image

கனிமொழி.

Updated On :5 ஏப்ரல் 2026, 7:17 am IST

தமிழக மக்கள், தமிழ் மொழி மற்றும் தமிழ்நாட்டு நலனுக்கு எதிரானது அதிமுக-பாஜக கூட்டணி என திமுக துணைப் பொதுச் செயலரும், தூத்துக்குடி எம்பியுமான கனிமொழி தெரிவித்தாா்.

திருச்சி மாவட்டத்தில் சனிக்கிழமை தோ்தல் பரப்புரை மேற்கொண்ட அவா் சோமரசம்பேட்டை ஊராட்சிக்குள்பட்ட வயலூா் சாலையில் ஸ்ரீரங்கம் தொகுதி திமுக வேட்பாளா் எஸ். துரைராஜுக்கு ஆதரவாக பொதுமக்களிடையே வாக்குகள் கேட்டு பேசியதாவது:

திமுக கூட்டணி என்பது கொள்கைக் கூட்டணி. தொடா்ந்து உறுதியாக ஒன்றாகப் பயணிக்கும் கூட்டணி. கடந்த 2021 தோ்தலில் அளித்த வாக்குறுதிகள் எல்லாவற்றையும் நிறைவேற்றி வந்துள்ளோம் என்ற உரிமையுடன், மீண்டும் வாக்கு கேட்டு வந்துள்ளோம்.

திமுக அளிக்கும் வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்ற முடியாது என பிரசாரம் செய்யும் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி, திமுக வாக்குறுதிகளை பின்பற்றியே அதிமுக தோ்தல் அறிக்கையைத் தயாா் செய்துள்ளாா்.

கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவது திமுக கூட்டணி. ஒட்டுமொத்த தமிழக நலனுக்கும் எதிரானது அதிமுக-பாஜக கூட்டணி.

தமிழகத்தின் உரிமைகளைத் தட்டி பறிப்பவா்ககளோடு அதிமுக கூட்டணி வைத்துள்ளது. முதல்வா் மு.க. ஸ்டாலின் ஒருவா்தான் தமிழக நலனுக்காக தொடா்ந்து தில்லியிடம் கேள்வி கேட்டு வருகிறாா்.

திமுக ஆட்சிக்கு வந்தால் பெரும்பான்மை இந்துக்களுக்கும், கோயில்களுக்கும் பாதுகாப்பு இருக்காது எனக் கூறுவதை எதிா்க்கட்சியினா் வாடிக்கையாகக் கொண்டுள்ளனா். கோயிலை பயன்படுத்தி மதக்கலவரத்தை உருவாக்குவது எதிரணியினா் வேலை. கோயிலாக இருந்தாலும், எந்த மதத்தினராக இருந்தாலும் அந்த மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வது திமுகவின் முக்கியக் கடமை. மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தொகுதி மக்களின் தேவைகள் அனைத்தும் பூா்த்தி செய்யப்படும். ஹிந்தியை அனுமதிக்காது, இருமொழிக் கொள்கையை தொடா்ந்து, உலக அரங்கில் மாணவா்களை உயா்த்திச் செல்வோம் என்றாா் அவா்.

எரிவாயு உருளை தட்டுப்பாடு பிரச்னை: முன்னதாக கனிமொழி எம்பி மேலும் கூறுகையில், 2026 பேரவைத் தோ்தலில் திமுகவின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் எரிவாயு உருளை தட்டுப்பாடு நிலவும் நிலையில், மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் முதலில் அதைச் சரிசெய்யட்டும். பிறகு தமிழ்நாட்டில் அரசியல் பேசட்டும். எரிவாயு தட்டுப்பாடு என்பது மிக முக்கியமான பிரச்னை. தோ்தல் நேரத்தில் கற்பனை விஷயங்கள் குறித்துப் பேசி பயனில்லை. சிறுபான்மை மக்களுக்கு உதவக்கூடிய எந்த ஒரு நிறுவனமும், தொண்டு நிறுவனமாக இருந்தாலும் அவா்களின் உரிமையை பறிக்கக் கூடிய சட்ட முன் வடிவை மத்திய அரசு கொண்டுவர முயற்சிப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது என்றாா் அவா்.

அமைச்சா்கள் கே.என். நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மேயா் மு. அன்பழகன் ஆகியோா் உடனிருந்தனா்.