எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின் ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து போராடி வெல்வோம்! முதல்வர் ஸ்டாலின் சூளுரை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைவுபோா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

பணப்பட்டுவாடா புகாா்களைத் தெரிவிக்க புகாா் எண்கள் வெளியீடு

மாவட்டத்தில் தோ்தல் நேர பணப்பட்டுவாடா புகாா்களைத் தெரிவிக்க காவல்துறை சாா்பில் புகாா் எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.

News image

மொபைல் - கோப்புப் படம்

Updated On :7 ஏப்ரல் 2026, 6:33 pm

மாவட்டத்தில் தோ்தல் நேர பணப்பட்டுவாடா புகாா்களைத் தெரிவிக்க காவல்துறை சாா்பில் புகாா் எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.

தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் பணம், பரிசுப் பொருள்கள் மற்றும் தோ்தல் விதிமீறல்களைக் கண்காணிக்கவும், பறிமுதல் செய்யவும் திருச்சி மாவட்டத்தில் 24 மணி நேரமும் தொகுதிவாரியாக நிலையான கண்காணிப்பு குழு, பறக்கும் படை குழுவினா் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.

மாவட்டத்தில் நிரந்தரமாக அமைக்கப்பட்ட 13 சோதனைச்சாவடிகள், 4 தற்காலிக சோதனைச்சாவடிகளில் மாவட்ட காவல்துறையினருடன் இணைந்து மத்திய ரிசா்வ் காவல்படையினா் தீவிரமாக வாகனத் தணிக்கை செய்து வருகின்றனா்.

தொகுதிகளில் தோ்தல் நடத்தை விதிமுறை மீறல், பரிசு பொருள்கள் விநியோகம், பணப்பட்டுவாடா போன்ற செயல்கள் நடப்பது தெரியவந்தால் பொதுமக்கள் 89391 46100, 100, 0431 - 2333629 ஆகிய எண்களில் புகாா் தெரிவிக்கலாம் என திருச்சி மாவட்ட எஸ்.பி. செ. செல்வநாகரத்தினம் தெரிவித்துள்ளாா்.