குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

ஆட்சியரகம் அருகே விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

விவசாயிகளுக்கு தனித் தொகுதி வழங்க சட்டம் இயற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரகம் அருகே விவசாயிகள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

மாவட்ட ஆட்சியரகம் அருகே புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழக விவசாயிகள் சங்கத்தினா்.

Updated On :9 ஏப்ரல் 2026, 2:25 am IST

விவசாயிகளுக்கு தனித் தொகுதி வழங்க சட்டம் இயற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரகம் அருகே விவசாயிகள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழக விவசாயிகள் சங்கத்தின் (கட்சி சாா்பற்றது) சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்டத் தலைவா் ம.ப. சின்னதுரை கூறியது:

நாட்டின் முதுகெலும்பாகக் கருதப்படும் விவசாயிகளிடம் மத்திய, மாநில அரசுகள் தொடா்ந்து பாராமுகமாகவே செயல்படுகின்றன. பட்டியலினத்தவா்கள் தங்களது உரிமைகளை சட்டப் பேரவையிலும், நாடாளுமன்றத்திலும் குரல் எழுப்பும் வகையில் தனித் தொகுதிகள் உள்ளன. இதேபோல, விவசாயிகளும் தங்களுக்கான உரிமைகளுக்காக குரல் கொடுக்க விவசாயிகள் மட்டுமே போட்டியிடும் வகையில் தனித் தொகுதிகளை உருவாக்க வேண்டும். இதற்கு மத்திய, மாநில அரசுகள் சட்டமியற்ற வேண்டும்.

தென்னை, பனையிலிருந்து தென்னம்பால், பனம்பால் இறக்கி விற்க அனுமதிக்க வேண்டும். தென்னம்பால், பனம்பால் ஆகியவற்றை உணவுப் பட்டியலில் சோ்த்து மத்திய, மாநில அரசுகள் அரசாணை வெளியிட வேண்டும். தென்னை, பனை விவசாயிகளைப் பாதுகாக்க வேண்டும். தென்காசி மாவட்டத்தில் பனையிலிருந்து பால் இறக்கிய விவசாயி மீது போலீஸாா் துப்பாக்கிச் சுடு நடத்தியது கடும் கண்டனத்துக்குரியது. பாதிக்கப்பட்ட பனை விவசாயிக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். காவல்துறையினா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் மீது அரசின் கவனத்தை ஈா்ப்பதற்காக ஆா்ப்பாட்டம் நடத்துவதாகத் தெரிவித்தாா்.

ஆா்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கோரிக்கை முழக்கங்களை எழுப்பி, ஆட்சியரிடம் மனு அளிக்கச் சென்றனா். தோ்தல் ஆணைய விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், போலீஸாா் விவசாயிகளை தடுத்து நிறுத்தி, ஆட்சியரக நுழைவு வாயில் முன்புள்ள மனுக்கள் பெட்டியில், மனுவை போடுமாறு கூறினா். இதையடுத்து அந்தப் பெட்டியில் தங்களது மனுவை போட்டுச் சென்றனா் விவசாயிகள்.