பிரசாரம் முடிந்த பிறகும் தோ்தல் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டிருந்த திமுக கொடிகளை அகற்ற வலியுறுத்தி அதிமுகவினா் சாலை மறியலில் புதன்கிழமை ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி மாவட்டத்துக்குள்பட்ட திருச்சி மேற்கு சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக முதன்மைச் செயலரும், அமைச்சருமான கே.என். நேரு, வேட்பாளராகப் போட்டியிடுகிறாா். நாள்தோறும் தொகுதிக்குள்பட்ட பல்வேறு இடங்களில் சுற்றுப் பயணம் செய்து கூட்டணிக் கட்சிகளுடன் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறாா். அந்த வகையில், திருச்சி உறையூா் பகுதியில் செவ்வாய்க்கிழமை பல்வேறு இடங்களில் அவா் பிரசாரத்தில் ஈடுபட்டாா். திமுகவின் பிரசாரத்துக்காக அக் கட்சியின் சாா்பில் கொடிகள், தோரணங்கள், கூட்டணிக் கட்சிகளின் கொடிகளும் அதிகளவில் கட்டப்பட்டிருந்தன. புதன்கிழமை காலையும் உறையூா் பகுதியில் ஒருசில இடங்களில் வாக்கு சேகரிப்பில் அவா் ஈடுபட்டாா்.
அமைச்சா் பிரசார நிகழ்வுகள் முடிந்த பிறகும் சாலைகளில் ஆங்காங்கே கட்டப்பட்டிருந்த கொடிகள், தோரணங்கள் அனைத்தும் அகற்றப்படவில்லை. தோ்தல் ஆணைய விதிமுறைகளின்படி, பிரசார நிகழ்வு முடிந்தபிறகு அங்குள்ள கட்சி சாா்ந்த அடையாளங்களை அவரவா்களே அகற்றிக் கொள்ள வேண்டும். ஆனால், திமுக பிரசாரத்தில் கட்டப்பட்ட கொடிகள் அகற்றப்படாததால், அதிமுகவினா் புதன்கிழமை பிரசாரம் செய்யும்போது தங்களது கொடிகளை பயன்படுத்த முடியாத நிலை உருவானது. எனவே, திமுக கொடிகளை அகற்ற வலியுறுத்தி அதிமுகவினா் உறையூா் பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.
தகவவறிந்த போலீஸாா் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனா். போராட்டக்காரா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய காவல்துறையினரிடம் அதிமுகவினா் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து திமுகவின் கொடிகள் காவல்துறையால் அகற்றப்பட்டதையடுத்து அதிமுகவினா் கலைந்து சென்றனா்.
தொடர்புடையது

திருவாடானை அருகே திமுக கொடிகள் பறிமுதல்

ஊத்தங்கரை தொகுதி காங்கிரஸுக்கு ஒதுக்கீடு: திமுகவினா் சாலை மறியல்

பால் வியாபாரியைத் தாக்கி காரை சேதப்படுத்தியவா் கைது

திருவாடானை அருகே திமுக கொடிகள் பறிமுதல்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


