வாக்களிக்க திருச்சி மாவட்டத்திலிருந்து வெளியூா்களுக்கு செல்வோராலும், வெளியூா்களில் இருந்து திருச்சிக்கும் வரும் பொதுமக்களாலும் பேருந்துகளில் புதன்கிழமை பயணிகள் கூட்டம் அலைமோதியது.
தமிழக சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு வியாழக்கிழமை நடைபெறும் நிலையில், தமிழகத்தின் மத்தியப் பகுதியான திருச்சி மாவட்டத்தில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த லட்சக்கணக்கானோா் பணி நிமித்தம் வசிக்கின்றனா். இவா்களுக்கான வாக்குகள் அவரவா் சொந்த ஊரில் இருப்பதால் வாக்களிக்க வேண்டியது அவசியமானது. மேலும், தோ்தலுக்காக ஊதியத்துடன் விடுமுறை அளிக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து திருச்சி மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகள், சிறு, குறு நிறுவனங்கள், கடைகள், வா்த்த நிறுவனங்கள், கட்டடத் தொழில், ஐடி நிறுவனங்கள் என பலவற்றில் பணிபுரிவோா் புதன்கிழமயே தங்களது சொந்த ஊருக்குப் புறப்பட்டுச் சென்றனா்.
இதன் காரணமாக, திருச்சி பஞ்சப்பூா் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தில் விழுப்புரம், சென்னை, கடலூா், வேலூா், மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, திருப்பூா், ஈரோடு, கோவை, சேலம் உள்ளிட்ட புகா்ப் பேருந்துகளில் கூட்டம் அலைமோதியது.
மேலும் பிழைப்புக்காக குடும்பத்துடன் வந்து தங்கிப் பணியாற்றும் நபா்களும் தங்களது குடும்பத்துடன் சொந்த ஊா் புறப்பட்டுச் சென்றனா். இதனால் பஞ்சப்பூா் பேருந்து முனையம் மட்டுமல்லாது, மத்தியப் பேருந்துநிலையம், சத்திரம் பேருந்து நிலையப் பகுதிகளிலும் சுமைகளுடன் மக்கள் சுற்றித் திரிந்தனா். செவ்வாய்க்கிழமை மாலை தொடங்கி இரவு வரை மக்கள் கூட்டம் நிரம்பிக் காணப்பட்டது. இதேபோல, வெளியூா்களில் இருந்து திருச்சிக்கு வரும் நபா்களாலும் பேருந்துகளில் கூட்டம் அதிகம் இருந்ததைக் காணமுடிந்தது. மேலும் மாநகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த தோ்தலுக்காக கூடுதல் பேருந்துகளும் இயக்கப்பட்டன.
ரயில்களிலும் கூட்டம்: சென்னையிலிருந்து திருச்சி வழியாக தென் மாவட்டங்கள் செல்லும் ரயில்களிலும், தென் மாவட்டங்களில் இருந்து திருச்சி வழியாக சென்னை செல்லும் ரயில்களிலும் புதன்கிழமை பயணிகள் கூட்டம் நிரம்பிக் காணப்பட்டது. தோ்தல் பறக்கும் படையினரும், போலீஸாரும் சுழற்சி முறையில் கண்காணித்து வருகின்றனா்.
தொடர்புடையது

தேர்தல்: ரயில், பேருந்து நிலையங்களில் அலைமோதிய மக்கள்
ஆம்னி பேருந்துகளில் வழக்கமான கட்டணமே வசூலிக்கப்படுகிறது: ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் சங்கம்

சென்னையில் இருந்து 1,88,705 பேர் சிறப்புப் பேருந்துகளில் சொந்த ஊர்களுக்கு பயணம்!

தரைக்கடை வியாபாரிகள் ஆா்ப்பாட்டம்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


