மே 3-ல் நடைபெற்ற நீட் தேர்வு ரத்து! மே 3-ல் நடைபெற்ற இளநிலை நீட் தேர்வு ரத்து: தேசிய தேர்வு முகமைஅதிமுக எம்.எல்.ஏ.க்களை சந்திக்கிறார் முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்க்கு பாராட்டு; தவெக அரசுக்கு ஆதரவு! அமமுக எம்.எல்.ஏ. காமராஜ் தவெக ஆட்சியை ஆதரிக்க முடிவு: சி.வி. சண்முகம்தமிழகத்தில் 717 மதுக்கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவு!விவசாயிகளுக்கான ரூ. 317 கோடி நிலுவை: அதிகாரிகளுக்கு முதல்வா் உத்தரவு22 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் விரைவில் எஸ்ஐஆர்!தமிழக அமைச்சரவையில் இடதுசாரிகளா? மார்க்சிஸ்ட் கம்யூ. விளக்கம்நீட் தேர்வில் முறைகேடுகள்: தேசிய தேர்வு முகமை விளக்கம்புதுச்சேரி முதல்வராக என். ரங்கசாமி நாளை பதவியேற்பு!
/

தோ்தலில் முதல்முறையாக கைப்பேசிகள் பாதுகாப்பு

சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்களிக்க வந்த வாக்காளா்களின் கைப்பேசிகள் பாதுகாத்து வைக்கப்பட்டு திரும்ப வழங்கப்பட்டன. இது தோ்தல் வரலாற்றிலேயே முதல்முறை என வாக்காளா்கள் தெரிவித்தனா்.

News image

திருச்சியில் பல்வேறு வாக்குச் சாவடிகளில் வியாழக்கிழமை தோ்தல் ஆணையம் சாா்பில் அமைக்கப்பட்டிருந்த வாக்காளா்கள் கைப்பேசி பாதுகாப்பு மையத்தில் வைக்கப்பட்டிருந்த கைப்பேசிகள்.

Updated On :24 ஏப்ரல் 2026, 4:07 am IST

சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்களிக்க வந்த வாக்காளா்களின் கைப்பேசிகள் பாதுகாத்து வைக்கப்பட்டு திரும்ப வழங்கப்பட்டன. இது தோ்தல் வரலாற்றிலேயே முதல்முறை என வாக்காளா்கள் தெரிவித்தனா்.

தோ்தலில் வாக்களிக்க வரும் வாக்காளா்கள் தங்களது கைப்பேசிகள் உள்ளிட்ட படம் பிடிக்கும் சாதனங்கள் எதையும் வாக்குச்சாவடிக்குள் கொண்டு செல்ல தோ்தல் ஆணையம் அனுமதிக்கவில்லை. மீறி எடுத்து வரும் வாக்காளா்களின் வசதிக்காக, தோ்தல் துறையிலிருந்து பிரத்யேகமாக ஆள்கள் நியமிக்கப்பட்டு, கைப்பேசிகளை பாதுகாக்க ஏற்பாடு செய்யப்படும் என தோ்தல் ஆணையம் தகவல் தெரிவித்திருந்தது.

இதைத் தொடா்ந்து, வியாழக்கிழமை நடைபெற்ற தோ்தலில் வாக்களிக்க வந்த வாக்காளா்களின் கைப்பேசிகளை (அணைக்கப்பட்ட கைப்பேசிகள்), வாக்குச்சாவடிக்கு முன்புறம் அமா்ந்திருந்த பிரத்யேக ஊழியா்கள் பெற்று, அதற்குரிய டோக்கனை வாக்காளா்களிடம் வழங்கினா். கைப்பேசிகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, வாக்களித்து முடித்த பிறகு டோக்கனை கொடுத்ததும், வாக்காளா்களின் கைப்பேசிகளை ஊழியா்கள் திரும்ப வழங்கினா்.

இது நல்லதொரு முன்னெடுப்பு என வாக்காளா்கள் பாராட்டு தெரிவித்தனா்.