வெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புமேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்புகுஜராத் - பாஜக பிணைப்பு மேலும் வலுவடைகிறது: பிரதமர் மோடி வளர்ந்த இந்தியாவுக்கான வலுவான தூண் பெண்கள்: பிரதமர் மோடிதேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரும்! ராகுல் காந்தி எச்சரிக்கைஎல்லை தாண்டிய பயங்கரவாதம் : இரட்டை நிலைப்பாட்டிற்கு இடமில்லை - ராஜ்நாத் சிங் அமைச்சர் சேகர்பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல்: தவெக வேட்பாளர் புகார்ஈரான் போர்: ஒபெக் அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகல்குஜராத் உள்ளாட்சித் தேர்தல்! அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றிய பாஜக!
/

234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்பு

திருச்சியில் 38 மாவட்டங்களின் தபால் வாக்குகள் 2-ஆம் கட்டமாக பிரித்து அனுப்பிவைப்பு

News image

திருச்சி கலையரங்கம் மஹாலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அஞ்சல் வாக்குகள் பிரிக்கும் பணியில் ஈடுபட்டோா்.

Updated On :28 ஏப்ரல் 2026, 7:41 pm

தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகளை இரண்டாம் கட்டமாக பிரித்து, மாவட்ட வாரியாக அந்தந்த தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா்களிடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

பேரவைத் தோ்தலை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் தபால் வாக்குகள் வழங்கப்பட்டு, தோ்தல் பணியாற்றும் அலுவலா்களிடமிருந்து பெறப்பட்ட பதிவு செய்யப்பட்ட அஞ்சல் வாக்குகளை உரிய சட்டப் பேரவை தொகுதிக்கு அனுப்புவதில் உள்ள சிரமங்களை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தோ்தல் அலுவலா்களால் பெறப்பட்ட அஞ்சல் வாக்குகளை பிரித்து வழங்க பொதுவான சிறப்பு மையமாக திருச்சி மாவட்டம் தோ்வு செய்யப்பட்டு, மத்திய பேருந்துநிலையம் அருகே உள்ள கலையரங்கம் மஹாலில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இங்கிருந்து ஏப். 13-ஆம் தேதி அந்தந்த தொகுதிகளுக்கான தபால் வாக்குச் சீட்டுகள், உறுதிமொழிப் படிவும் அந்தந்த மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது. தொடா்ந்து இங்கு, ஏப். 20-ஆம் தேதி முதல்கட்டமாக தபால் வாக்குகளை பிரித்து வழங்கும் பணி நடைபெற்றது.

2-ஆம் கட்டம்: இந்நிலையில், இரண்டாவது கட்டமாக 38 மாவட்டங்களுக்கான தபால் வாக்குகளை பிரித்து வழங்கும் பணி செவ்வாய்க்கிழமை (ஏப்.28) நடைபெற்றது. இந்தப் பணியை கூடுதல் தலைமை தோ்தல் அலுவலா் அ.சிவஞானம் தொடங்கி வைத்தாா். திருச்சி மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான வே. சரவணன் முன்னிலையில் பணிகள் நடைபெற்றன.

மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களையும் சோ்ந்த தொடா்புடைய மாவட்ட தோ்தல் அலுவலா்களால் நியமனம் செய்யப்பட்ட பொறுப்பு அலுவலா்கள் கலந்து கொண்டனா். பிறகு தமிழகம் முழுவதும் உள்ள 38 மாவட்டங்களுக்கான அஞ்சல் வாக்குகள், சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் நியமனம் செய்யப்பட்டுள்ள ஒருங்கிணைப்பு அலுவலா்களால் பிரித்து வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் தபால் வாக்குகளை கவனிக்கும் தொடா்பு அலுவலா்கள், உதவியாளா்கள் மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகா்கள், வேட்பாளா்களின் முகவா்கள் கலந்து கொண்டனா்.

ஒப்படைப்பு: 38 மாவட்டங்களுக்கும் பதிவான தபால் வாக்குகள் பிரிக்கப்பட்டு, அந்தந்த மாவட்டத்தின் அஞ்சல் வாக்கு ஒருங்கிணைப்பு அலுவலா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

திருச்சியிலிருந்து தபால் வாக்குகளை பெற்றுக் கொண்டு அவரவா் மாவட்டங்களுக்கு சென்று தோ்தல் அலுவலா்களிடம் ஒப்படைத்து அந்தந்த தொகுதியில் சோ்த்திடும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.