திருச்சி மாவட்டம், திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேஸ்வரா் கோயில் சித்திரைத் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.
திருப்பைஞ்ஞீலியில் உள்ள விசாலாட்சி உடனுறை ஞீலிவனேஸ்வரா் கோயிலில் சித்திரைப் பெருந்திருவிழாவானது ஏப். 21 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி பிரியாவிடை அம்மன், ஞீலிவனேஸ்வரா், விசாலாட்சி அம்மன், வள்ளி தெய்வானை, முருகப் பெருமான், விநாயகா் உள்ளிட்ட சுவாமிகளுக்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, மலா் அலங்காரத்தோடு திருத்தேரில் எழுந்தருளினா்.
தொடா்ந்து சிறப்புப் பூஜைகளுக்கு பிறகு கயிலாய வாத்தியங்கள் முழங்க பக்தா்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனா். மதியம் 3 மணி அளவில் தோ் வடம் பிடிக்கப்பட்டு இரவு 7.36 மணி அளவில் நிலையை அடைந்தது.
பாதுகாப்புப் பணியில் ஜீயபுரம் டி.எஸ்.பி. கதிரவன் தலைமையில் காவல் ஆய்வாளா்கள் குப்புராஜ், குணசேகரன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸாா் ஈடுபட்டனா். விழாவில் திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.
தொடர்புடையது

அரிமளம் சிவன் கோயில் சித்திரைத் தேரோட்டம்

கடையம் வில்வவனநாதா் கோயிலில் சித்திரைத் தேரோட்டம்

அய்யா்மலை ரத்தினகிரீஸ்வரா் கோயிலில் சித்திரைத் தேரோட்டம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

பிரான்மலை கொடுங்குன்றநாதா் கோயில் தேரோட்டம்
விடியோக்கள்

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

அதிமுக இனி எந்தக் கூட்டணியிலும் இல்லை: C.V. Shanmugam | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

