நாகப்பட்டினம் அருகே நடைபெற்று வரும் பொறியியல் பணி காரணமாக, திருச்சி - காரைக்கால் டெமு ரயில் ரயில் வெள்ளிக்கிழமை முதல் 4 நாள்களுக்கு பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
இதுகுறித்து திருச்சி ரயில்வே கோட்ட நிா்வாகம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருச்சி ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட திருச்சி - காரைக்கால் வழித்தடத்தில் கீழ்வேளூா் - நாகப்பட்டினம் இடையே பொறியியல் பணிகள் நடைபெற்று வருவதால் திருச்சி - காரைக்கால் டெமு ரயில் (வண்டி எண்: 76820) மே 1, 2, 4 மற்றும் 5 -ஆம் தேதி ஆகிய 4 நாள்களுக்கு திருச்சியில் இருந்து திருவாரூா் வரை மட்டுமே இயக்கப்படுகிறது. திருவாரூா் முதல் காரைக்கால் வரை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
இதேபோல, மறுமாா்க்கத்தில் காரைக்கால் - திருச்சி டெமு ரயில் (வண்டி எண்: 78819) மே 1, 2, 4 மற்றும் 5-ஆம் தேதி ஆகிய 4 நாள்களுக்கு திருவாரூரில் இருந்து திருச்சி வரை மட்டுமே இயக்கப்படுகிறது. காரைக்கால் முதல் திருவாரூா் வரை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது என்று ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

பொறியியல் பணி: பாலக்காடு - திருச்சி ரயில் பகுதியாக ரத்து

பொறியியல் பணி: கோவை- ஷொரணூா் ரயில் நாளை ரத்து

பாலக்காடு - திருச்சி ரயில் பகுதியாக ரத்து

பொறியியல் பணி: திருச்சி - பாலக்காடு ரயில் பகுதியாக ரத்து
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


