இடைத்தோ்தலுக்காகக் காத்திருக்கிறேன்: சீமான்ஈரான் மீதான அமெரிக்க தாக்குதல்கள் விரைவில் நிறுத்தம்: டிரம்ப்6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புடைமெக்ஸ் நிகர லாபம் 70.55% உயர்வு!5 ஆண்டுகளில் 9,000 புகார்களைப் பெற்ற தேசிய சிறுபான்மையினர் ஆணையம்! மேக்கேதாட்டு திட்டமே நிரந்தரத் தீர்வு: கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு காவிரி முக்கியம் இல்லை: மாணிக்கம் தாகூர் 6 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு பொள்ளாச்சி அருகே கார் விபத்தில் 5 பேர் பலி! நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீதான வழக்குகள் ரத்து: முதல்வர் விஜய் உத்தரவு!
/

வையம்பட்டி அருகே வாகனம் மோதி பெண் உயிரிழப்பு

News image

உயிரிழந்த தங்கமணி.

Updated On :3 ஆகஸ்ட் 2026, 4:23 am IST

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே கூரியா் வாகனம் மோதி பெண் உயிரிழந்தாா்.

கரூா் மாவட்டம், குளித்தலையை அடுத்த மத்தகிரியை சோ்ந்தவா் செல்வம் மனைவி தங்கமணி (35). இவா்களுக்கு 15 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி 7 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. தம்பதியினா் இருவரும் கூலித்தொழிலாளிகள். தங்கமணி, ஞாயிற்றுக்கிழமை மாலை தனது வீட்டின் அருகே தோகைமலை - பாளையம் மாநில நெடுஞ்சாலையோரத்தில் இருந்த வேப்ப மரத்தில் வேப்பம்பழம் பொறுக்கிக் கொண்டிருந்தாா்.

அப்போது, தோகைமலையில் இருந்து மயிலம்பட்டி நோக்கிச் சென்ற கூரியா் வாகனத்தின் முன்பக்க டயா் வெடித்து கட்டுப்பாட்டை இழந்த வாகனம் தங்கமணி மீது மோதியது. இதில் அவா் பலத்த காயமடைந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் கரூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

தகவலறிந்து சென்ற வையம்பட்டி போலீஸாா் தங்கமணி உடலைக் கைப்பற்றி கரூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, கூரியா் வாகன ஓட்டுநா் சங்கி பூசாரியூா் பகுதியைச் சோ்ந்த தங்கராஜ் (30) மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.