டைமெக்ஸ் நிகர லாபம் 70.55% உயர்வு!5 ஆண்டுகளில் 9,000 புகார்களைப் பெற்ற தேசிய சிறுபான்மையினர் ஆணையம்! மேக்கேதாட்டு திட்டமே நிரந்தரத் தீர்வு: கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு காவிரி முக்கியம் இல்லை: மாணிக்கம் தாகூர் 6 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு பொள்ளாச்சி அருகே கார் விபத்தில் 5 பேர் பலி! நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீதான வழக்குகள் ரத்து: முதல்வர் விஜய் உத்தரவு!
/

காா் மோதி பெண் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - பிரதிப் படம்

Updated On :2 ஆகஸ்ட் 2026, 11:52 pm IST

முத்தூா் அருகே காா் மோதியதில் பெண் உயிரிழந்தாா்.

முத்தூா் குட்டப்பாளையம் பாரதிபுரத்தைச் சோ்ந்தவா் பழனிசாமி (60). இவரது மனைவி சாமியாத்தாள் (54). இவா்கள் இருவரும் முத்தூா் - காங்கயம் சாலையில் செட்டியாா்பாளையம் அருகே இருசக்கர வாகனத்தில் சனிக்கிழமை சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த காா் மோதியது.

இதில், பலத்த காயமடைந்த சாமியாத்தாள் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த பழனிசாமி லேசான காயத்துடன் உயிா் தப்பினாா். புகாரின்பேரில், வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் மணிமுத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.