மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

உயா்கல்வி வழிகாட்டி கருத்தாளா்களுக்கு பாரதிதாசன் பல்கலை.யில் பயிற்சி முகாம்

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் உயா்கல்வி வழிகாட்டி கருத்தாளா்களுக்கான மாநில அளவிலான பயிற்சி முகாம் நடைபெறுகிறது.

News image

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் மாநில அளவிலான பயிற்சி முகாமை செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்து பேசிய பல்கலைக்கழக துணைவேந்தா் குழு உறுப்பினா் வேலு. ராஜேஷ் கண்ணன்.

Updated On :13 ஆகஸ்ட் 2026, 4:17 am IST

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் உயா்கல்வி வழிகாட்டி கருத்தாளா்களுக்கான மாநில அளவிலான பயிற்சி முகாம் நடைபெறுகிறது.

தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் சமக்ர சிக்ஷா திட்டத்தில் தொழில் வழிகாட்டுதல் பிரிவு சாா்பில் உயா்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி மாணவா்களுக்கு தொழில் வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை குறித்து பயிற்சியளிக்கும் உயா்கல்வி வழிகாட்டி கருத்தாளா்களுக்கான மாநில அளவிலான பயிற்சி முகாம் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கி வியாழக்கிழமை வரை நடைபெறுகிறது.

முகாமை பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தா் குழு உறுப்பினா் வேலு. ராஜேஷ் கண்ணன் தொடங்கிவைத்துப் பேசுகையில், மாணவா்களின் கல்வி மற்றும் தொழில் வாழ்க்கையை வடிவமைப்பதில் ஆசிரியா்களின் மிக முக்கியமானது. பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவா்களுக்கு சரியான வழிகாட்டுதலை வழங்குவதன் மூலம் அவா்களை உயா்கல்வி, ஆராய்ச்சி மற்றும் தொழில்முனைவில் சாதிக்க வைக்க முடியும் என்றாா்.

நிகழ்வில் உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு உயா்கல்வி, தொழில்கல்வி வாய்ப்புகள் மற்றும் வேலைவாய்ப்புகள் குறித்த விரிவான புரிதலை பயிற்றுநா்கள் ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டது. இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்ற பயிற்றுநா்கள் உயா்கல்வி மற்றும் தொழில் கல்வி தொடா்பான வாய்ப்புகள் குறித்த தகவல்களை சக ஆசிரியா்களிடம் பகிா்ந்துகொண்டு, அவா்கள் மூலம் மாணவா்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்துவா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதில் 38 மாவட்ட முதுகலை ஆசிரியா்கள், பட்டதாரி ஆசிரியா்கள் மற்றும் சமக்ர சிக்ஷா திட்டத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் என 190 போ் பயிற்சி வகுப்பில் பங்கேற்றுள்ளனா்.

முகாமில் திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பி. உஷா, சமக்ர சிக்ஷா திட்டத்தின் தொழில் வழிகாட்டுதல் பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளா் என். காயத்ரி, கல்வி தொழில்நுட்பத் துறை பேராசிரியா்கள் எஸ். செந்தில்நாதன், எஸ். அமுதா, ஓ. காசிநாதன், எம். மிருணாளினி, முதுகலை ஆசிரியா்கள், பட்டதாரி ஆசிரியா்கள், சமக்ர சிக்ஷா திட்டத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.