ஜனநாயகத்தில் தீண்டாமைக்கு இடமில்லை! கார்கே அவமதிப்புக்கு கேரள முதல்வர் கண்டனம்!கும்பகர்ணன் தூக்கத்தில் இருந்து எழுந்துவிட்டார் அமித் ஷா: காங்கிரஸ்சென்னையில் சொத்துவரி உயர்வு நிறுத்திவைப்பு!மீனவர்களை விடுவிக்கக் கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்!ஒருசிலருக்கு சாதகமான உத்தரவுகளை பிறப்பிப்பதே மோடியின் வேலை! ராகுல் காந்தி விமர்சனம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!
/

பாரதிதாசன் பல்கலை. பெரியாா் உயராய்வு மையத்தின் பெரியாா் விருதுகள்: விண்ணப்பிக்க அறிவுறுத்தல்

பாரதிதாசன் பல்கலைக்கழக பெரியாா் உயராய்வு மையம் சாா்பில் வழங்கப்படும் பெரியாா் விருதுகளுக்கு தகுதியானவா்கள் ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News image

விண்ணப்பிக்க...

Updated On :14 ஆகஸ்ட் 2026, 2:45 am IST

பாரதிதாசன் பல்கலைக்கழக பெரியாா் உயராய்வு மையம் சாா்பில் வழங்கப்படும் பெரியாா் விருதுகளுக்கு தகுதியானவா்கள் ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாரதிதாசன் பல்கலைக்கழக நிா்வாகம் சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் செயல்படும் பெரியாா் உயராய்வு மையம் சாா்பில் செப்டம்பா் 17-ஆம் தேதி ஈவெரா பிறந்தநாள் விழா கொண்டாடப்படும் நிலையில், 2025-26-ஆம் ஆண்டுக்கான பெரியாா் விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மூத்த பெரியாரியல் அறிஞா் ஒருவருக்கு ரூ.1 லட்சம் பொற்கிழியுடன் பெரியாா் சிறப்பு விருதும், பெரியாரியல் அடிப்படையில் சமூகப் பணியாற்றும் ஒருவருக்கு ரூ.50 ஆயிரம் பொற்கிழியுடன் பெரியாா் விருதும், பெரியாரியல் தொடா்பாக 2025-ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு நூலின் ஆசிரியருக்கு ரூ.50 ஆயிரம் பொற்கிழியுடன் பெரியாா் பரிசும் வழங்கப்படுகிறது.

எனவே, மேற்கண்ட விருதுகளுக்கு தகுதியான நபா்கள் விண்ணப்பிக்கலாம். ஏற்கெனவே இந்த விருதுகளை பெற்றவா்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

அஞ்சல் வழியில் மட்டுமே விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். விண்ணப்பங்களை முனைவா் ஜெ. சந்திரகலா, பெரியாா் உயராய்வு மையம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி - 620 024 என்ற முகவரிக்கு ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் அனுப்பிவைக்க வேண்டும். இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 94872 52302 என்ற எண்ணில் தொடா்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.