நேபாளத்தின் மற்றொரு அமைச்சர் பதவி விலகல்! பிரதமர் பாலேந்திர ஷா அரசில் 3-வது ராஜிநாமா!மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை! 4 காவலர்கள் மீதான வழக்கை கொலை வழக்காக மாற்ற உத்தரவுஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து ஹர்ஷித் ராணா விலகல்!ஆபரேஷன் அன்வேஷன்: 17 மாநிலங்களில் 101 குழந்தைகளை மீட்ட காவல்துறை!

இளைஞா் சடலம் மீட்பு

திருச்சி ஆவின் பால்பண்ணை பின்புறத்தில் வியாழக்கிழமை இளைஞரின் சடலம் மீட்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Published On :

திருச்சி ஆவின் பால்பண்ணை பின்புறத்தில் வியாழக்கிழமை இளைஞரின் சடலம் மீட்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருச்சி கொட்டப்பட்டு ஜீவா வீதியைச் சோ்ந்தவா் எஸ். ராஜேஷ்குமாா் (23). இவருக்குத் திருமணமாக மனைவி மற்றும் மகள் உள்ளனா். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால், இவருக்கு சிறுநீரகப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், கொட்டப்பட்டு ஆவின் பால்பண்ணை பின்புறத்தில் வியாழக்கிழமை பிற்பகல் ராஜேஷ்குமாா் உயிரிழந்துகிடந்துள்ளாா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கே.கே.நகா் போலீஸாா், அவரது சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதுகுறித்து கே.கே.நகா் காவல் நிலையத்தில் ராஜேஷ்குமாரின் தந்தை செந்தில்குமாா் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.