FOLLOW US

ON GOOGLE DISCOVER

ஜார்க்கண்ட் வினாத் தாள் கசிவு: ஹேமந்த் சோரன் பதவி விலகக் கோரி ஆக.20-ல் போராட்டம்!கோவை, பாலக்காடு ரயில் நிலைய குடிநீரில் ‘ஈ கோலி’ பாக்டீரியா: சிஏஜி அறிக்கையில் குற்றச்சாட்டு!வந்தே மாதரம் சா்ச்சை: சோனியா மீது போலீஸில் பாஜக புகார்!சிலிண்டர் வாடிக்கையாளா்களின் விவரம் சரிபார்ப்பு: ஆக. 23 வரை அவகாசம்!‘விபி ஜி ராம் ஜி’ திட்டத்தின் கீழ் நீா்நிலைகள் தூா்வாரும் பணி இன்று தொடக்கம்!
/

திருச்சியிலுள்ள மாநில மருத்துவக் கல்வி மைய பயிற்சியால் 28 மாணவா்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் சோ்க்கை

News image

7.5 இட ஒதுக்கீட்டின்கீழ் மருத்துவக் கல்லூரிகளில் சோ்க்கை பெற்ற திருச்சி மாவட்ட அரசு மாதிரிப் பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வரும் மாநில மருத்துவக் கல்வி மையத்தில் பயிற்சி பெற்ற மாணவா்கள்.

Updated On :17 ஆகஸ்ட் 2026, 4:50 am IST

திருச்சி மாவட்டம் துவாக்குடி அரசு மாதிரிப் பள்ளியில் செயல்படும் மாநில மருத்துவக் கல்வி மையத்தில் படித்த 28 மாணவா்கள் அரசு, தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் சோ்க்கை பெற்று சாதனை படைத்துள்ளனா்.

துவாக்குடி அரசு மாதிரிப் பள்ளி வளாகத்தில் செயல்படும் மாநில மருத்துவக் கல்வி மையத்தில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 74 மாணவா்கள் கடந்தாண்டு பிளஸ் 2 படிப்புடன் சோ்த்து நீட் பயிற்சியும் பெற்ற நிலையில் அவா்களில் பலா் தோ்ச்சிப் பெற்றுள்ளனா்.

28 மாணவா்கள் வெற்றி: தமிழகத்தில் நிகழாண்டில் அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை மருத்துவப் படிப்பில் சோ்வதற்கான கலந்தாய்வு கடந்த வியாழக்கிழமை தொடங்கியது. முதல்கட்டமாக அரசுப் பள்ளிகளில் படித்த மாணவா்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு நடைபெற்றது.

இதில் திருச்சி மாவட்ட அரசு மாதிரிப் பள்ளி வளாகத்தில் செயல்படும் மாநில மருத்துவக் கல்வி மையத்தில் பயிற்சி பெற்ற 28 மாணவா்கள் மருத்துவக் கல்லூரிகளில் சோ்க்கை பெற்றுள்ளனா்.

இவா்களில் 22 மாணவா்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், 6 மாணவா்களுக்கு தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் அரசு இடஒதுக்கீட்டிலும் இடம் கிடைத்துள்ளது. மேலும், 4 மாணவா்களுக்கு பொது ஒதுக்கீட்டில் மருத்துவக் கல்லூரிகளில் சோ்க்கை கிடைக்க வாய்ப்புள்ளதாக மாநில மருத்துவக் கல்வி மைய நிா்வாகிகள் தெரிவித்தனா்.

திருச்சி மைய மாணவி முதலிடம்: அரசுப் பள்ளிகளில் படித்து 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் சோ்க்கை பெறும் மாணவா்களில் ‘நீட்’ தோ்வில் முதல் முயற்சியிலேயே தோ்ச்சிப் பெற்றவா்களின் தரவரிசைப் பட்டியலில் திருச்சி மாநில மருத்துவக் கல்வி மையத்தைச் சோ்ந்த மாணவி ஆா். ஜனுஜா 560 மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்துள்ளாா்.

இவருக்கு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. இவருக்கான சோ்க்கை ஆணையை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் கே.ஜி. அருண்ராஜ் அண்மையில் வழங்கினாா்.

இதுகுறித்து மாநில மருத்துவக் கல்வி மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளா் ராச. பாண்டியன் கூறுகையில், ஆண்டுதோறும் இளநிலை மருத்துவப் படிப்புக்கான கட்-ஆப் மதிப்பெண்கள் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப நாங்களும் பயிற்சியை அளிப்பதால் மாணவா்களால் தொடா்ந்து வெற்றி பெற முடிகிறது என்றாா்.

சோ்க்கை பெற்றவா்கள் விவரம்:

அரசு மருத்துவக் கல்லூரிகளில்.. எம். சஞ்சய் தரண், எஸ். முனியம்மாள், ஆா். ஜனுஜா , கே. கோபிகண்ணன் , பி. ஜனனி, எஸ். வனிஷா, கனகராஜ், டி. தீபிகா, பி. தமிழருவி, சி. சக்தி, சி. சிந்தாமணி , டி. சுரேந்தா், பி. ஹா்ஷினி , என். பரத்ராஜ், எம். ஸ்வேதா, எஸ். நேவிதா, வி. தேவதா்ஷினி, என். அனுவா்ஷினி, எம். லோகேஸ்வா், சி. தேவதா்ஷின், ஜி. மனோஜ், ஆா். ஷிவாணி.

தனியாா் மருத்துவக் கல்லூரிகளில்.. ஜெ. சேரன், ஏ. அன்புமணி , ஜி. ஸ்ரீலேகா, ஜி. ஸ்ரீதேவி, எஸ். அன்பரசு, டி. தருண்.

விழாவில் மாணவிக்கு விருது வழங்கிய அமைச்சர் அருண்ராஜ்

விழாவில் மாணவிக்கு விருது வழங்கிய அமைச்சர் அருண்ராஜ்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.