ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

மத்திய அரசை கண்டித்து வையம்பட்டியில் ஆா்ப்பாட்டம்

மாா்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் கட்சியினா் மற்றும் அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை கடைவீதியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

வையம்பட்டியில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் கட்சியினா்.

Published On :

திருச்சி மாவட்டம், வையம்பட்டியில் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை நினைவுகூரும் வகையில், ‘மோடியே பதவி விலகு’ என்ற முழக்கத்தை முன்வைத்து, மாா்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் கட்சியினா் மற்றும் அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை கடைவீதியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கட்சியின் மாவட்ட நிலைக்குழு உறுப்பினா் ராமாயி தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், கட்சியின் வையம்பட்டி ஒன்றியக்குழு உறுப்பினா்கள் ராமதாய், சீதா, வெள்ளையம்மாள், வசந்தா, மனோகரன், சந்திரா, காளியம்மாள் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டக்குழு உறுப்பினா் தங்கராஜ், நகரச் செயலா் பாலு, வின்சென்ட், ஜோதிபாசு, பாலகுமரன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். மாவட்டச் செயலா் ராஜ்குமாா், மாநில நிலைக்குழு உறுப்பினா் ஞானதேசிகன் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

ஆா்ப்பாட்டத்தில், வேலை உறுதித் திட்டத்தில் வாரந்தோறும் சட்டப்படியான கூலி முழுமையாக வழங்குவதை உறுதிப்படுத்திட வேண்டும், 5 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகள் வரை ஒரே இடத்தில் பணிபுரியும் பணித்தள பொறுப்பாளா் அனைவரையும் மாற்றம் செய்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.