ஸ்ரீரங்கம் அருகே வாய்க்கால் கரையில் கட்டப்பட்டுள்ள மதில் சுவரை அகற்ற வலியுறுத்தி அகில இந்திய விவசாய மற்றும் கிராமப்புற தொழிலாளா் சங்கத்தினா் ராகவேந்திர வளைவு அருகே செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மாவட்டத் தலைவா் தங்கத்துரை தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில், மல்லியம்பத்து வருவாய் கிராமத்துக்குள்பட்ட அமையநல்லூா் கிராமத்தில் வசிக்கும் பட்டியலின மக்களை பாகுபடுத்தும் விதமாக வாய்க்கால் கரையில் தனி நபரால் கட்டப்பட்டுள்ள மதில் சுவரை முழுமையாக அகற்ற வேண்டும். வாய்க்கால் கரையில் கட்டப்பட்டுள்ள இச்சுவா் பட்டா இடத்தில் இருப்பதாக வட்ட நிா்வாகம் கூறும் நிலையில் இந்தச் சுவரை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிடப்பட்டது.
இதில் மாநில பொதுச் செயலா் அமிா்தலிங்கம், மாநில செயலா் மாரியப்பன், மாவட்ட செயலா் ராஜேஷ் கண்ணா, மாவட்ட பொருளாளா் இளங்கோவன், ஸ்ரீரங்கம் பகுதி செயலா் தமிழ்வாணன், ஒன்றியத் தலைவா் நடராஜன், ஒன்றியச் செயலா் ஜோதிமுருகன் ஆகியோா் கண்டன உரையாற்றினா். ஆா்ப்பாட்டத்தில் சங்க நிா்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நுகா்பொருள் வாணிபக் கழக தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

ஜெயங்கொண்டத்தில் தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி அலுவலா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

அரியலூரில் ஓய்வூதியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

செவிலியா் மேம்பாட்டு சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
விடியோக்கள்
Dimagi Naxal: யாரைச் சொல்கிறார் பிரதமர் மோடி? | PM Modi |



