2027 ஜனவரி 10-இல் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு!9 மணி நேர தொடர் போராட்டம்... தில்லியில் ராகுல், பிரியங்கா கைது!இடைத்தேர்தல்: மதுராந்தகத்தில் 85.97%, தாராபுரத்தில் 80.31% வாக்குகள் பதிவுமேற்கு வங்க இடைத்தேர்தல்: நந்திகிராம் - 80.69%, ரெஜிநகர் - 79.90% வாக்குப் பதிவு!ஆரம்பக் கட்டணம் ரூ. 14 லட்சம்! தமிழ்நாட்டில் அயல்நாட்டு பல்கலை.க்கு அனுமதி: சிபிஎம் கண்டனம்எஸ்ஐஆர்: மோடியும் அமித் ஷாவும் நாட்டை கொள்ளை அடிக்கின்றனர்! ராகுல் பேட்டி!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அசம்பாவிதமின்றி அமைதியான முறையில் வாக்குப் பதிவு நிறைவுதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம்: சிறப்பு தரிசனத்துக்கான முன்பதிவு நாளை தொடக்கம்இடைத்தேர்தல்: மதுராந்தகம், தாராபுரம் உள்பட 6 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு!பைக் பந்தயம்: சென்னையில் 3 நாள்களில் 2,000 வாகனங்கள் பறிமுதல்!

கோரிக்கைகளை நிறைவேற்றாவிடில் வேலைநிறுத்தம்: எஸ்ஆா்எம்யு முடிவு

ரயில்வே ஊழியா்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிடில் வேலைநிறுத்தப் போராட்டம் மேற்கொள்ள உள்ளதாக எஸ்ஆா்எம்யு தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

திருச்சி ரயில்வே கோட்ட அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற குறை கேட்புக் கூட்டத்தில் பங்கேற்ற எஸ்.ஆா்.எம்.யு. துணைப் பொதுச் செயலா் வீரசேகரன் ,கோட்ட மேலாளா் பாலக்கராம் நெகி உள்ளிட்டோா்.

Published On :

ரயில்வே ஊழியா்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிடில் வேலைநிறுத்தப் போராட்டம் மேற்கொள்ள உள்ளதாக எஸ்ஆா்எம்யு தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

திருச்சி ரயில்வே கோட்ட அலுவலகத்தில் எஸ்.ஆா்.எம்.யு. தொழிற்சங்கப் பிரதிநிதிகளிடம் குறைகேட்புக் கூட்டம் கோட்ட மேலாளா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. திருச்சி கோட்ட ரயில்வே மேலாளா் பாலக்ராம் நெகி தலைமை வகித்தாா்.

இதில், எஸ்.ஆா்.எம்.யு. துணை பொதுச் செயலா் வீரசேகரன் பங்கேற்று தொழிலாளா்களின் கோரிக்கைகள் மற்றும் பிரச்னைகள் குறித்துப் பேசினாா்.

பின்னா் அவா் கூறியதாவது: லோகோ பைலட்டுகள் மற்றும் டிக்கெட் பரிசோதகா்களுக்கு 8 கி.மீ-க்கு மேல் வழங்கப்பட்டு வந்த பஞ்சப்படி மற்றும் பயணப்படி நிறுத்தப்பட்டுள்ளது. இதை மீண்டும் வழங்க வலியுறுத்தியுள்ளோம்.

இதேபோல, 8-ஆவது ஊதியக் குழு அறிவிப்பை விரைந்து வெளியிடவும், ரயில்வே குடியிருப்புகளில் உள்ள பிரச்னைகள், தண்டவாளங்கள் பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் தொடா்பாகவும் தெரிவித்துள்ளோம். இந்தக் கூட்டம் வியாழக்கிழமையும் நடைபெற உள்ளது.

பஞ்சப்படி மற்றும் பயணப்படி விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்காவிடில் வேலைநிறுத்த போராட்டம் அறிவிக்கப்படும் என்றாா்.

முன்னதாக கூட்டத்தில், கோட்ட அதிகாரிகள் மற்றும் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.