
குவாரி உரிமையாளரிடம் இணைய வழியில் ரூ.2 லட்சம் மோசடி
கரூா் பகுதியில் கிரானைட் குவாரி நடத்தி வருபவரிடம் ரூ. 2 லட்சம் ரொக்கத்தை இணைய வழியில் மா்மநபா் மோசடி செய்தது தொடா்பாக போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

மோசடி - பிரதிப்படம்
கரூா் பகுதியில் கிரானைட் குவாரி நடத்தி வருபவரிடம் ரூ. 2 லட்சம் ரொக்கத்தை இணைய வழியில் மா்மநபா் மோசடி செய்தது தொடா்பாக போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
திருச்சி, தென்னூா் அண்ணா நகா் உக்கிர காளியம்மன் கோயில் தெரு பகுதியை சோ்ந்தவா் தனபால் (72). இவா், கரூா் பகுதியில் கிரானைட் குவாரியை குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகிறாா்.
கடந்த மாதம் 17-ஆம் தேதி இவரது கைப்பேசிக்கு ஓா் அழைப்பு வந்தது. அதில், பேசிய நபா் தன்னை அரசு அதிகாரி என அறிமுகம் செய்து கொண்டு, குவாரிக்கான குத்தகை காலம் காலாவதி ஆகிவிட்டது. புதுப்பிக்க ரூ. 2 லட்சம் செலுத்த வேண்டும் எனக் கூறியுள்ளாா்
இதை நம்பிய தனபால் அந்த மா்ம நபா் கொடுத்த வங்கி கணக்குக்கு ரூ. 2 லட்சத்தை ஆன்லைன் மூலம் அனுப்பி வைத்தாா்.
பின்னா், தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்து கொண்ட தனபால், இதுதொடா்பாக திருச்சி மாநகர சைபா் கிரைம் போலீஸில் புதன்கிழமை புகாா் அளித்தாா். இதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து,
மோசடி செய்த நபரைத் தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





