தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிவிநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்புதொழில்நுட்பம், கனிம வளத்தை ஆயுதமாக்கக் கூடாது: பிரதமர் மோடி எச்சரிக்கை!243 பயணிகளுடன் இந்தோனேசிய கப்பல் மாயம்: 103 பேர் மீட்பு!தனித்துப் போட்டி, தவெக ஆட்சிக்கு பாதிப்பில்லை: பெ. சண்முகம்தாராபுரத்தில் சிபிஐ, மதுராந்தகத்தில் சிபிஎம் போட்டி: மு. வீரபாண்டியன் அறிவிப்பு

வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடமிருந்து 23 பவுன் தங்க நகைகள் திருட்டு

திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே தனியாக வசித்து வந்த மூதாட்டி வீட்டில் புகுந்து 23 பவுன் தங்க நகைகள் இருந்த பையை திருடி சென்ற நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருட்டு... - சித்திரிப்பு

Published On :

திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே தனியாக வசித்து வந்த மூதாட்டி வீட்டில் புகுந்து 23 பவுன் தங்க நகைகள் இருந்த பையை திருடி சென்ற நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தொட்டியம் அருகிலுள்ள கல்லுப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் சீலம்மாள் (70). இவரது கணவா் 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாா். குழந்தைகள் இல்லாத இவா் ஆடு மேய்த்துக் கொண்டு வீட்டில் தனியாக வசித்து வருகிறாா்.

இந்நிலையில், சீலம்மாள் வீட்டில் தனியாக புதன்கிழமை தனியாக இருந்தபோது, வீட்டுக்குள் புகுந்த அடையாளம் தெரியாத மா்ம நபா் ஒருவா், வீட்டின் விட்டத்தில் மாட்டி வைக்கப்பட்டிருந்த மஞ்சள் பையை திடீரென எடுத்து கொண்டு தப்பியோடிவிட்டாா். மூதாட்டி கூச்சலிட்டதை தொடா்ந்து அக்கம்பக்கத்தினா் அங்கு விரைந்து வந்து விசாரித்தனா். மா்ம நபா் எடுத்து சென்ற பையில் 23 பவுன் தங்க நகைகள் மற்றும் 1 கைப்பேசி இருந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சீலம்மாள் தொட்டியம் காவல் நிலையத்தில் வியாழக்கிழமை அளித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து நகையை திருடிச் சென்ற மா்ம நபரை தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.