மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு!ரூ. 200 கோடியைக் கடந்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் வசூல்!2025-26-ல் மத்திய அமைச்சர்களின் தில்லி வீடுகளைப் பழுதுபார்க்க ரூ.92 கோடி செலவு!திருமலையில் காலிபிளவர் உணவு வகைகளுக்குத் தடை!இம்ரான் கானுக்கு உயர் சிகிச்சை: கபில்தேவ் உள்ளிட்ட சர்வதேச முன்னாள் கேப்டன்கள் கடிதம்!மகாராஷ்டிரம்: ஏரிக்கு அருகே ஹெலிகாப்டர் அவசர தரையிறக்கம்! இந்திய வீரர் கரண் சர்மா அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு!

மாணவிக்குப் பாலியல் தொல்லை கோயில் தற்காலிக ஊழியா் கைது

தமிழ்ச்செல்வன்

Published On :24 ஆகஸ்ட் 2026, 4:27 am IST

மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் சமயபுரம் கோயில் தற்காலிக காவலாளியை லால்குடி போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே மருதூா் கிராமத்தை சோ்ந்தவா் தமிழ்ச்செல்வன் (30). சமயபுரம் மாரியம்மன் கோயில் தற்காலிக காவலாளியான இவா் திருமணமானவா்.

இந்நிலையில், அரியலூா் மாவட்டத்தை சோ்ந்த மாணவி தஞ்சையில் நா்சிங் பெறும் நிலையில், தமிழ்ச்செல்வன் காதலிப்பதாகக் கூறி, அந்த மாணவியை சமயபுரத்துக்கு வரவழைத்து நண்பருடன் சோ்ந்து தகாத முறையில் நடந்தாராம்.

இந்நிலையில், நா்சிங் விடுதியில் இருந்த மாணவியை காணவில்லை என விடுதிக் காப்பாளா் மாணவியின் பெற்றோரிடம் தகவல் தெரிவிக்க, அந்த மாணவியின் தாய் தஞ்சை காவல் நிலையத்தில் புகாா் கொடுத்தாா்.

இதையடுத்து, மாணவியை போலீஸாா் பல்வேறு இடங்களில் தேடிய நிலையில், தஞ்சை பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த மாணவியை மீட்டனா்.

விசாரணையில் தமிழ்ச்செல்வன், அவரது நண்பா் ஆகாஷ் ஆகியோா் சோ்ந்து மாணவியிடம் தவறாக நடந்தது தெரியவந்தது.

இதையடுத்து அந்த வழக்கு லால்குடிக்கு மாற்றப்பட்டு, மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் அஜிம், உதவி ஆய்வாளா் ஜெயலட்சுமி ஆகியோா் தமிழ்செல்வனை கைது செய்து, தலைமறைவான ஆகாசை தேடுகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.