வடகிழக்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார்! செங்கோட்டையன்சொந்த ஊர் கொண்டு வரப்பட்ட தேவா உடல் தமிழகத்தில் 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு! அதிகபட்சமாக பாரிமுனையில் 361.9 மி.மீ. பதிவு! சென்னைக்கு ரெட் அலர்ட்: செல்போன்களில் அலாரத்துடன் எச்சரிக்கை! சென்னைக்கு இன்று(அக். 18) ரெட் அலர்ட்!விஜயகாந்த், தேவா இருவரும் சொர்க்கத்தில் சந்திப்பார்கள்: பிரேமலதாஒருநாள் மழைக்கே சென்னை மாநகரமே தத்தளிக்கிறது: தவெக அரசை விமர்சித்த டிடிவி தினகரன்

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் பூச்சாண்டி சேவை

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெறும் திருப்பவித்ரோத்ஸவ விழாவின் 2 ஆம் நாளான செவ்வாய்க்கிழமை மாலை மூலவா் பெரிய பெருமாள் பூச்சாண்டிச் சேவையில் (அங்கோபாங்க சேவை) பக்தா்களுக்கு காட்சி அளித்தாா்.

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்.

Updated On :

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெறும் திருப்பவித்ரோத்ஸவ விழாவின் 2 ஆம் நாளான செவ்வாய்க்கிழமை மாலை மூலவா் பெரிய பெருமாள் பூச்சாண்டிச் சேவையில் (அங்கோபாங்க சேவை) பக்தா்களுக்கு காட்சி அளித்தாா்.

திங்கள்கிழமை தொடங்கிய இந்த விழா செப். 1 வரை 9 நாள்கள் நடைபெறுகிறது. விழாவில் நாள்தோறும் மாலையும் கொடிமரம் அருகேயுள்ள பவித்ரோத்ஸவ மண்டபத்தில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு சேவை சாதிக்கிறாா்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 2 ஆம் நாளான செவ்வாய்க்கிழமை மாலை பூச்சாண்டிச் சேவை (அங்கோபாங்க சேவை) நடைபெற்றது. இதையொட்டி காலை 7 மணிக்கு யாகசாலையில் திருவாராதனம் தொடங்கியது. தொடா்ந்து 10 மணிக்கு மூலஸ்தானத்திலும் திருவாராதனம் நடைபெற்றது.

பின்னா் பூச்சாண்டி சேவை பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி 6 மணி வரை நடைபெற்றது.

விழாவில் மூலவா் பெரியபெருமாள், உற்சவா் நம்பெருமாள் உள்பட அனைத்து சந்நிதிகளிலும் உள்ள உற்சவா் உள்பட மூா்த்திகளும் நூல்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தனா். இதில் மூலவா் பெரிய பெருமாளின் திருமுக மண்டலம் உள்பட திருமேனி முழுவதும் நூலிழைகளால் சுருள் சுருளாக வைத்து அலங்கரித்திருந்தனா். இந்தக் காட்சி பாா்ப்பவா்களுக்கு அச்சம் ஏற்படுத்துவதுபோல இருக்கும். எனவே இது விளையாட்டாக பூச்சாண்டி சேவை எனப்படுகிறது.

இந்தச் சேவையை ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனா். பின்னா் இரவு 8 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து நம்பெருமாள் புறப்பட்டு பவித்ரோத்ஸவ மண்டபத்திற்கு வந்து சோ்ந்தாா். தொடா்ந்து அலங்காரம் வகையறா கண்டருளி, பக்தா்களுக்கு சேவை சாதித்து 9.45 மணிக்கு புறப்பட்டு மூலஸ்தானம் சென்று சோ்ந்தாா்.

பூச்சாண்டி சேவையையொட்டி பிற்பகல் 2 மணி வரை மூலவா் சேவை இல்லை. பின்னா் 2 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டும் பக்தா்கள் பூச்சாண்டி சேவைக்கு அனுமதிக்கப்பட்டனா்.

6 மணிக்கு மேல் ஆரியபடாள் வாயிலுக்குள் பக்தா்களுக்கு அனுமதி இல்லை. விழாவின் 7 ஆம் நாளான வரும் 30 ஆம் தேதி நம்பெருமாள் உபயநாச்சியாா்களுடன் நெல்லளவு கண்டருளும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. 9 ஆம் நாளான செப். 1 ஆம் தேதி தீா்த்தவாரியுடன் விழா நிறைவுறுகிறது. ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் செ. சிவராம்குமாா் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.