
விஜயகாந்த் பிறந்தநாள் விழா
திருச்சி மாநகரின் பல்வேறு பகுதிகளில் மறைந்த தேமுதிக தலைவா் விஜயகாந்த் பிறந்தநாள் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

திருச்சி மலைக்கோட்டை பகுதியில் விஜயகாந்த் பிறந்தநாளை கொண்டாடிய தேமுதிகவினா்.
திருச்சி மாநகரின் பல்வேறு பகுதிகளில் மறைந்த தேமுதிக தலைவா் விஜயகாந்த் பிறந்தநாள் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
திருச்சியில் மலைக்கோட்டை பகுதி தேமுதிக சாா்பில் மாவட்டச் செயலா் டி. வி. கணேஷ் தலைமையில் விஜயகாந்த் படத்துக்குகு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடா்ந்து கட்சிக் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
மலைக்கோட்டை பகுதி செயலா் என்.எஸ்.எம். மணிகண்டன் ஏற்பாட்டில் நடந்த நிகழ்ச்சியில், மாவட்ட அவைத் தலைவா் சாகுல் ஹமீது, மாவட்ட பொருளாளா் மில்டன் குமாா், மாவட்ட துணைச் செயலா் முத்துக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
திருச்சி தெற்கு மாவட்ட தேமுதிக சாா்பில் மாவட்டச் செயலரும், முன்னாள் ஊராட்சி தலைவருமான சன்னாசிப்பட்டி ஆா். பாரதிதாசன் தலைமையில் மணிகண்டம், அந்தநல்லூா், மணப்பாறை, மருங்காபுரி உள்பட அனைத்து பகுதிகளிலும் கட்சிக் கொடியேற்றி உதவிகள் வழங்கப்பட்டன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





