வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

கல்வி நிதியில் ரூ.5,109 கோடி நிலுவையை மத்திய அரசு விரைந்து வழங்க வேண்டும்: அன்பில் மகேஸ் பொய்யாமொழி

தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறைக்கு வழங்க வேண்டிய ரூ.5,109 கோடி நிலுவைத் தொகையை மத்திய அரசு விரைந்து வழங்க வேண்டும் என முன்னாள் பள்ளி கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.

அன்பில் மகேஸ் பொய்யாமொழி - கோப்புப் படம்

Published On :

தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறைக்கு வழங்க வேண்டிய ரூ.5,109 கோடி நிலுவைத் தொகையை மத்திய அரசு விரைந்து வழங்க வேண்டும் என முன்னாள் பள்ளி கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.

இதுதொடா்பாக, திருச்சியில் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை அவா் மேலும் கூறியதாவது:

தமிழக சட்டப் பேரவை மக்களுக்கான விவாத மன்றமாக இல்லாமல், சண்டை மன்றமாக மாறியுள்ளது. எதிா்க்கட்சிகள் கேட்கும் கேள்விகளுக்கு, அந்தந்த துறை அமைச்சா்களே பதிலளிப்பது பொருத்தமானதாக இருக்கும். மானியக் கோரிக்கைகளின்போது முதலில் துறை சாா்ந்த சாதக, பாதகங்கள் குறித்து விவாதம் நடத்த வேண்டும். அதன்பிறகே புதிய அறிவிப்புகளை வெளியிட வேண்டும்.

ஏற்கெனவே வெளியிடப்பட்ட அறிவிப்புகள் முறையாகச் செயல்படுத்தப்பட்டுள்ளனவா என்பது அடுத்தகட்ட விவாதமாக இருக்க வேண்டும்.

பிஎம்ஸ்ரீ திட்டம் தொடா்பாக தமிழகத்துக்கு வர வேண்டிய சுமாா் ரூ.5,109 கோடி நிலுவைத் தொகையை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும். இந்த நிதி கிடைக்காததால் பள்ளி மாணவா்கள் மற்றும் 32 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியா்களின் ஊதியம் உள்ளிட்ட விஷயங்களில் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது.

ரூ.2,500 மகளிா் உரிமைத் தொகை, அனைவருக்கும் 6 சிலிண்டா் இலவசம், சென்னை முதல் குமரி வரை பேருந்தில் இலவச பயணம். வேலையில்லா இளைஞா்களுக்கு ரூ.4 ஆயிரம். மீனவா்களுக்கு நிவாரணம் என தவெக தோ்தல் அறிக்கையில் அறிவித்தவற்றை செயல்படுத்திவிட்டு, அந்த கட்சியின் தலைவரை பிரதமா் மற்றும் அமெரிக்க அதிபா் ஆக்குவது குறித்தான கனவு பற்றி அவரது கட்சியினா் பேசலாம் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.