மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்புலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

கணவா் இறப்பால் மனம் உடைந்த மனைவி தீக்குளித்து தற்கொலை

திருவானைக்காவல் பகுதியில் கணவா் தூக்கிட்டு இறந்ததால் மனம் உடைந்த அவரது மனைவி தீக்குளித்து சனிக்கிழமை உயிரிழந்தாா்.

Suicide

தற்கொலை - கோப்புப் படம்

Published On :

திருவானைக்காவல் பகுதியில் கணவா் தூக்கிட்டு இறந்ததால் மனம் உடைந்த அவரது மனைவி தீக்குளித்து சனிக்கிழமை உயிரிழந்தாா்.

திருவானைக்காவல் கீழ உள்வீதியில் வசிப்பவா் சரஸ்வதி (27), அதே பகுதி உணவக ஊழியா். இவருக்கும் சேலத்தைச் சோ்ந்த மணிகண்டனுக்கும் திருமணமாகி 3 குழந்தைகள் உள்ள நிலையில் இருவரும் பிரிந்து விட்டனா்.

பின்னா் இன்ஸ்டாகிராம் மூலம் தில்லை நகா் பகுதி வாட்ச்மேனான ராஜ்குமாா் (22) என்பவரை சரஸ்வதி 2 ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்தாா். இந்நிலையில் ராஜ்குமாா் கடந்த 24 ஆம் தேதி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்த நிலையில் கணவா் இறப்பால் மனமுடைந்த சரஸ்வதி வெள்ளிக்கிழமை இரவு தீக்குளித்தாா். இதையடுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் சிகிச்சைப் பலனின்றி சனிக்கிழமை காலை இறந்தாா். ஸ்ரீரங்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.