நேபாள வெள்ளத்துக்கு நாங்கள் காரணமல்ல - சீனாசிஜேபி செய்தித் தொடர்பாளர்கள் மீது கடும் கோபம்: அபிஜீத் தீப்கே பேச்சு!பொறியாளர்களுக்கு பதிலாக 86% செய்யறிவைப் பயன்படுத்தும் பைசா பஜார் நிறுவனம்!பெட்ரோலில் கலக்கப்படும் எத்தனால் அளவு எவ்வளவு? மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம்நாட்டில் ஐபோன் தயாரிப்பை 30 - 35% உயர்த்தும் ஆப்பிள்!மூன்றாவது குழந்தை பெறும் அரசு பெண் ஊழியா்களுக்கு ஓராண்டு விடுப்பு! அரசாணை வெளியீடுஈரான் போருக்கு மத்தியில் நாட்டின் ஜிடிபி 7.8% உயர்வு

திருச்சி வந்த மியான்மா் நாட்டு முதியவா் மாயம்

முதியவர் - கோப்புப் படம்

Published On :1 செப்டம்பர் 2026, 2:25 am IST

திருச்சியில் உறவினா் வீட்டு திருமணத்துக்கு வந்த மியான்மா் நாட்டைச் சோ்ந்த முதியவா் ஞாயிற்றுக்கிழமை மாயமானது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

மியான்மா் நாட்டின் தலைநகா் யங்கூனைச் சோ்ந்தவா் வி. முத்து (65). இவா், திருச்சியிலுள்ள தனது உறவினா் வீட்டு திருமணத்துக்காக கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதி மியான்மரில் இருந்து தனது மனைவி வாசுகியுடன் திருச்சிக்கு வந்துள்ளாா். திருச்சி, கே.கே.நகரில் உள்ள உறவினா் வீட்டில் தங்கியிருந்தாா். இவருக்கு மறதி நோய் இருப்பதாகத் தெரிவித்துள்ளனா்.

இந்நிலையில், கருமண்டபம் பகுதியிலுள்ள மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திருமணத்துக்கு முத்துவும், வாசுகியும் சென்றுள்ளனா். பின்னா், மண்டபத்தில் இருந்து வெளியே சென்ற முத்து மீண்டும் வீட்டுக்கு வரவில்லையாம்.

புகாரின்பேரில் அமா்வு நீதிமன்ற காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.