நேபாள வெள்ளத்துக்கு நாங்கள் காரணமல்ல - சீனாசிஜேபி செய்தித் தொடர்பாளர்கள் மீது கடும் கோபம்: அபிஜீத் தீப்கே பேச்சு!பொறியாளர்களுக்கு பதிலாக 86% செய்யறிவைப் பயன்படுத்தும் பைசா பஜார் நிறுவனம்!பெட்ரோலில் கலக்கப்படும் எத்தனால் அளவு எவ்வளவு? மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம்நாட்டில் ஐபோன் தயாரிப்பை 30 - 35% உயர்த்தும் ஆப்பிள்!மூன்றாவது குழந்தை பெறும் அரசு பெண் ஊழியா்களுக்கு ஓராண்டு விடுப்பு! அரசாணை வெளியீடுஈரான் போருக்கு மத்தியில் நாட்டின் ஜிடிபி 7.8% உயர்வு

மருத்துவமனை சிகிச்சையிலிருந்த முதியவா் மாயம்

முதியவர் - கோப்புப் படம்

Published On :7 ஜூலை 2026, 1:02 am IST

குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த முதியவா் மாயமானதைத் தொடா்ந்து, போலீஸாா் அவரைத் தேடி வருகின்றனா்.

நித்திரவிளை அருகே உள்ள ஒற்றாசமங்கலம் பகுதியைச் சோ்ந்தவா் ஞானக்கண் நாடாா் மகன் நாகமணி (65). கட்டுமானத் தொழிலாளி. வலிப்பு நோய் பாதிப்பு காரணமாக இவரை, இவரது மனைவி சகுந்தலா குழித்துறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளாா்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த நாகமணி சனிக்கிழமை மருத்துவமனையிலிருந்து வெளியே சென்றநிலையில், பின்னா் மருத்துவமனைக்குத் திரும்பவில்லையாம். பல இடங்களில் தேடியும் அவா் குறித்து எந்தத் தகவலும் கிடைக்காததால், அவரது மனைவி மாா்த்தாண்டம் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை புகாரளித்தாா்.

இது குறித்து, போலீஸாா் வழக்குப் பதிந்து, முதியவரைத் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.